ரயில் அகலப் பாதை பணிகள் முடிந்தும் தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு மீண்டும் ரயில்சேவை தொடங்காததால், ரயில் பயணிகள், பக்தர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்திஉள்ளது.
திருவண்ணாமலையில் உலகப் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமான அண்ணாமலையார் கோயில்உள்ளது. பவுர்ணமி கிரிவலம்,தீபத் திருவிழாவுக்கு பல்வேறுஇடங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்வார்கள்.
இதேபோல், இங்குள்ள ரமண மஹரிஷி, சேஷாத்ரி ஸ்வாமிகள் ஆஸ்ரமங்களுக்கும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். ஆனால், போதிய அளவில் போக்குவரத்து கட்டமைப்பு வசதி மேம்படுத்தவில்லை என்று இங்கு வரும்பக்தர்கள், பொதுமக்கள் தொடர்ந்துபுகார் தெரிவித்து வருகின்றனர்.
கூடுதல் சுமைதிருவண்ணாமலையில் ரயில் நிலையம், ரயில் கட்டமைப்புகள் இருந்தும், பேருந்து வசதியை மட்டுமே மக்கள் நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும், சமீபத்தில் அரசு பேருந்து கட்டண உயர்வுக்குப் பிறகு, பேருந்து பயணமும் பொதுமக்களுக்கு கூடுதல் சுமையாக இருக்கிறது.
தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பல ஆண்டுகளாக 14 பெட்டிகள் கொண்ட முன்பதிவு இல்லாத பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இதில், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்து வந்தனர். குறிப்பாக, கல்லூரி மாணவ, மாணவிகள், வியாபாரிகள், அலுவலர்கள், நோயாளிகள், ஏழை, நடுத்தர மக்கள் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
இதற்கிடையே, கடந்த 2007-ம் ஆண்டு இந்த மீட்டர் கேஜ் பாதையை அகலப்பாதையாக மாற்றும் பணிகள் தொடங்கின. இதனால், தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்ட பயணிகளின் ரயில்சேவை திடீரென நிறுத்தப்பட்டது.
பக்தர்கள் ஏமாற்றம்இதற்கிடையே, தாம்பரம் - திருவண்ணாமலைக்கு அகலபாதைப் பணிகள் நிறைவடைந்து 3 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இன்னும் மீண்டும் நேரடி ரயில்சேவை தொடங்காதது பயணிகள், பக்தர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ரயில் பயணிகள் சார்பில் கோபாலகிருஷ்ணன் கூறியிருப்பதாவது:தாம்பரம்-திருவண்ணாமலை வரை மீட்டர்கேஜ் பாதையில் 12 பெட்டிகள் கொண்ட பயணிகள் ரயில் பல ஆண்டுகளாக இயக்கப்பட்டது. தற்போது, அகலப்பாதையாக மாற்றப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில்இந்தத் தடத்தில் மீண்டும் ரயில்சேவை தொடங்கப்படவில்லை. இதனால் திருவண்ணாமலைக்குச் செல்ல மக்கள் அதிக கட்டணம் கொடுத்து பேருந்துகளில் பயணிக்க வேண்டியுள்ளது.
பல்வேறு வழித் தடங்களில் இருந்து திருவண்ணாமலை வழியாக திருப்பதி, மும்பை, டெல்லிக்கு விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ரயில்வே அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போதெல்லாம் திருவண்ணாமலை கிரிவலத்தின் போதாவது ரயில்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், மக்களின் கோரிக்கையை ரயில்வே நிர்வாகம் ஏற்கவில்லை.
பேருந்து கட்டணத்துடன் ஒப்பிடும்போது ரயில் கட்டணம், மூன்றில் ஒரு பங்குதான் என்பதால், திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட ரயிலைமீண்டும் இயக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுதொடர்பாக டிஆர்இயு மூத்த நிர்வாகி இளங்கோவன் கூறும்போது, ‘‘சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில்களை இயக்க போதிய அளவில் ரயில்பாதைகள் அமைக்கப்பட்டும் பயணிகள் ரயில் இயக்கப் படாமல் உள்ளது. சென்னை - திருவண்ணாமலைக்குச் செல்லும் பேருந்து உள்ளிட்ட இதர வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதால் அடிக்கடி சாலை விபத்துகள் நடக்கின்றன.
சாலைகளும் சிதிலமடைந்துள்ளன. எனவே, மக்கள் பாதுகாப்பாக பயணம் செய்யும் வகையில் திருவண்ணாமலைக்கு நேரடியாக ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும். இதனால், தெற்கு ரயில்வேக்கு வருவாயும் கிடைக்கும்’’ என்றார்.
நிர்வாகம் சொல்வது என்ன?இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பயணிகள் ரயில்கள் இயக்கி வருகிறோம். இருப்பினும், பயணிகளின் கோரிக்கைகள் மற்றும் தேவை குறித்து ஆய்வு செய்து வாரியத்துக்கு பரிந்துரை செய்யப்படும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago