‘தனித்தேர்வர்கள் பிளஸ்-2 துணைத் தேர்வுக்கு ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம்’ என்று அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
அரசு தேர்வுத் துறை இயக்குநர் கு.தேவராஜன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பிளஸ்-2 துணைத் தேர்வுகள் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற உள்ளன. இதற்கு, முன்பு பிளஸ்-2 தேர்வெழுதியவர்கள், தேர்ச்சி பெறாத பாடங்களில் மீண்டும் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம் (எச் வகை). இதேபோல், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 2 ஆண்டுகள் இடைவெளியும், 1.9.2014 அன்று பதினாறரை வயது பூர்த்தி அடைந்தவர்கள் நேரடி தனித்தேர்வர்களாகவும் விண்ணப்பிக்கலாம் (எச்பி வகை).
மேற்குறிப்பிட்ட எச் மற்றும் எச்பி வகை தனித்தேர்வர்கள், ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் 14-ம் தேதி மாலை 5 மணி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்காக ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன் விவரங்களை தேர்வுத் துறையின் இணையதளத்திலும் (www.tndge.in), மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி, தேர்வுத் துறை மண்டல துணை இயக்குநர் அலுவலகங்களிலும் தெரிந்து கொள்ளலாம். தனித்தேர்வர்கள் சிறப்பு மையங்களுக்குச் சென்று தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.
தேர்வுக் கட்டணம் மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணத்தை பணமாக செலுத்த வேண்டும். பார்வையற்றோர் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில் உள்ள விண்ணப்ப எண்ணை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.அந்த எண்ணை பயன்படுத்தி ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு தேவராஜன் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago