நிதி வசதியின்றி பூஜை செய்யப் படாமல் இருக்கும் கோயில்களில், அரசின் சார்பில், நிதி வழங்கி நடத்தப்படும் ஒருகால பூஜை திட்டத்தை விரிவுபடுத்த, இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் 36,574 கோயில்கள் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.இதில், சுமார் 34,062 கோயில்களின் வருமானம் 10,000-க்கும் குறைவாகவே உள்ளது. இதனால், இந்தக் கோயில்களில் ஒருவேளை கூட பூஜை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தக் கோயில்களில் பூஜை நடத்துவதற்கு ஏதுவாக ஒரு கால பூஜை திட்டம், 1986-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
12,745 கோயில்கள்பொதுமக்களும் பங்கேற்கும் வண்ணம், 1993-ம் ஆண்டு, புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, கோயில் ஒன்றுக்கு, பொதுமக்கள் சார்பில் 10,000 ரூபாய் நன்கொடை வழங்கினால், நிதி வசதியுள்ள கோயில்களின் உபரி நிதி, கோயில் மற்றும் அறப்பணி நிதி, ஆலய மேம்பாட்டு நிதி போன்ற நிதிகளில் இருந்து ரூ.90 ஆயிரம் வழங்கப்பட்டு, மொத்தம் 1 லட்சம் ரூபாய் கோயில் பெயரில், வங்கியில் டெபாசிட் செய்யப்படும்.அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையிலிருந்து, குறிப்பிட்ட கோயிலின் ‘ஒரு கால பூஜைதிட்டம்’ செயல்பட்டு வருகிறது. தற்போது ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் 12,745 கோயில்கள் பயனடைகின்றன.
இந்நிலையில் இன்னும் பலகோயில்கள் ஒரு கால பூஜை கூட செய்யமுடியாத நிலையில் உள்ளன. இதனால் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த இந்து சமயஅறநிலையத் துறை முடிவு செய்துள்ளது. இதனையடுத்து அனைத்து உதவி ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட் டுள்ளது.இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஒருவர் கூறியதாவது:‘‘ஒரு கால பூஜை நடக்காத கோயில் ஏதாவது இருக்கும் பட்சத்தில், அக்கோயிலுக்கு, பொதுமக்கள் சார்பில், 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினால், அறநிலையத் துறை மூலம், 90 ஆயிரம் அளித்து, மொத்தமாக ஒரு லட்சம் ரூபாய், கோயில் பெயரில், வைப்பு நிதி உருவாக்கப்படும். இதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு பூஜை நடத்தப்படும்.தற்போது இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த அரசு சார்பில் முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து கோயில் செயல்அலுவலர்களுக்கு உரிய ஆலோசனையுடன் கூடிய விரிவான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. வரும் 30-ம் தேதிக்குள் விரிவானஅறிக்கையைத் தர அறிவுறுத்தப்பட் டுள்ளது’’ என்றார்.
நோக்கத்தை வீணடிக்கும் செயல்
இதுகுறித்து விஷ்வ இந்து பரிஷத் காஞ்சி மாவட்டத் தலைவர் அழகுவேல் மு. தங்கராஜ் கூறிய தாவது:‘‘ஒரு கால பூஜை திட்டத்தை விரிவாக்கம் செய்ய தமிழக அரசுமுடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ், பல கோயில்கள் வருவாய் உயர்வின் காரணமாக, பட்டியலுக்கு உட்பட்ட கோயிலாக தரம் உயர்த்தப்பட்டு, இணை ஆணையர் கட்டுப்பாட்டில் இயங்கிவருகின்றன. இருப்பினும், தற்போது ஒரு கால பூஜை திட்டத்தில் நிதி வழங்கி வருவது, திட்டத்தின் நோக்கத்தை வீணடிக்கும் செயலாகும்.தமிழகத்தில் விளக்கு ஏற்றக்கூட முடியாமல், ஆயிரக்கணக் கான கோயில்கள் உள்ளன. வருவாய் பெற்ற கோவில்களுக்கு வழங்கப்படும் நிதி உதவியை, இதுபோன்ற கிராம கோயில்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் ஏற்கெனவே ஒரு கால பூஜை திட்டத்தில் உள்ள கோயில்கள் பூஜை செய்யப்படாமல் உள்ளன. ஒரு கால பூஜை நிதியை செலவிடும் முறை குறித்து, முறையாக ஆய்வு நடத்த வேண்டும்.’’இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago