வரும் 3 தினங்களில் தமிழகத்தில் மழையின் அளவு படிப்படியாக குறையும்: சென்னை வானிலை ஆய்வு மையம் 

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் வரும் 3 தினங்களில் மழையின் அளவு படிப்படியாக குறையும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நுங்கம்பாக்கத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், "வியாழக்கிழமை தமிழகத்தின் உள்பகுதிகளில் நிலவிவந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து விட்டது. தற்போது குமரிக்கடல் முதல் தமிழகத்தின் உள்பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துள்ளது. ஒருசில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக செங்கல்பட்டில் 15 செ.மீ., மதுராந்தகத்தில் 14 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

அடுத்து வரும் 24 மணிநேரத்தைப் பொறுத்தவரையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். நெல்லை, தூத்துக்குடி, ராசமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, திருவாரூர் ஆகிய தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில் நகரின் சில பகுதிகளில் ஓரிரு முறை லேசான மழை பெய்யக்கூடும்.

வரும் 24, 25, 26 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையின் அளவு படிப்படியாக குறைந்துவிடும். மீனவர்களுக்கு சிறப்பு எச்சரிக்கை இல்லை.

சென்னையில் அக்டோபர் 1 முதல் இன்று வரையில் பதிவாகியுள்ள மழையின் அளவு 32 செ.மீ., இந்த காலகட்டத்தின் இயல்பு அளவு 57 செ.மீ., இயல்பை விட 44% குறைவு.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அக்டோபர் 1 முதல் இன்று வரை பதிவான மழையின் அளவு 28 செ.மீ., இந்த காலக்கட்டத்தின் இயல்பு அளவு 33 செ.மீ., இது இயல்பை விட 13% குறைவு.

கடந்த 24 மணிநேரத்தில் திண்டிவனம், செஞ்சியில் 8 செ.மீ., ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், ஆரணியில் 7 செ.மீ., அவிநாசி, போளூர், கடலூர், சோழவரம், செங்குன்றம் ஆகிய பகுதிகளில் 6 செ.மீ., நெய்வேலி, திருவண்ணாமலை, கலவை, ஆய்க்குடி, சீர்காழி, செய்யாறு, தாமரைப்பாக்கம், சங்கராபுரம், மணிமுத்தாறு, புதுச்சேரி, வேலூர் ஆகிய பகுதிகளில் 5 செ.மீ., என பரவலாக மழை பெய்துள்ளது" என பாலச்சந்திரன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்