``உரிய வாய்ப்புகள் தரப்படாமல் ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியது இயற்கை நீதிக்கு எதிரானது. அதனை நியாயப்படுத்த முடியாது” என தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர் வால் தலைமையிலான குழு தனது அறிக்கையில் தெரிவித் துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயி ரிழந்தனர். 100-க்கும் அதிகமா னோர் காயமடைந்தனர். இதை யடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு, தமிழக அரசு மே 28-ம் தேதி அரசாணை வெளி யிட்டது. அன்றைய தினமே ஆலை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
மூவர் குழு அமைப்பு
தமிழக அரசின் இந்த அரசா ணையை எதிர்த்து, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத் தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப் பாயத்தின் முதன்மை அமர்வு, இது தொடர்பாக ஆய்வு செய்ய மேகா லயா உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமை யில் மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இக்குழுவினர் செப்டம்பர் மாதம் 22, 23-ம் தேதிகளில் தூத்துக்குடி வந்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ததுடன், பொதுமக்க ளிடம் மனுக்களையும் பெற்றனர். தொடர்ந்து, சென்னையில் சில நாட்கள் முகாமிட்டு பல்வேறு தரப் பினரிடம் மனுக்களை பெற்றனர். இக்குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்க நவம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப் பட்டது.
அறிக்கை தாக்கல்
நீதிபதி தருண் அகர்வால் குழு வின் அறிக்கை கடந்த 26-ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 48 தலைப்புகளிலான தனித்தனி அறிக்கைகள், 48 உறைகளில் வைத்து தேசிய பசுமை தீர்ப்பாயத் தின் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஏ.கே.கோயல் தலைமையிலான முதன்மை அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந் தது. விசாரணையின்போது தருண் அகர்வால் குழு அறிக்கை விவரங் கள் தெரியவந்தன.
இயற்கை நீதிக்கு எதிரானது
அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியது இயற்கை நீதிக்கு எதிரானது, தவ றானது, அதனை நியாயப்படுத்த முடியாது. ஆலையை மூடு வதற்கு தமிழக அரசு கூறிய காரணங் கள் ஏற்கும்படியாக இல்லை. ஆலையை மூடுவது தொடர்பாக ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் ஏதும் கொடுக்கப்பட வில்லை. மேலும், அவர்களது தரப்பு நியாயங்களை எடுத்துக் கூற போதிய வாய்ப்பு வழங்கப் படவில்லை என தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகேயுள்ள பகுதி களில் நிலத்தடி நீரை கண்காணிக்க வேண்டும். தாமிர கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும். துறைமுகத்தில் இருந்து தாமிர தாதுவைப் பாதுகாப்பாக கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளையும் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தமிழக அரசுக்கு உத்தரவு
இதுதொடர்பாக, தமிழக அரசு ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம், வழக்கு விசாரணையை டிசம்பர் 7-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
ஸ்டெர்லைட் ஆலை தரப்பு வழக்கறிஞர் அரிமா சுந்தரம் கூறும்போது, ``தருண் அகர்வால் குழு அறிக்கை எங்களுக்கு சாதகமான சூழ்நிலையை உரு வாக்கியுள்ளது. ஆலையை மீண்டும் திறக்க இது உதவும்” என்றார் அவர்.
ஸ்டெர்லைட் நிறுவனத்தை மீண்டும் திறக்கும் வகையில், இந்த வழக்கில் தீர்ப்பு வரும் என நம்புவதாக, ஸ்டெர்லைட் நிறுவன தலைமை செயல் அதிகாரி பி.ராம்நாத் தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் நிகழக் கூடாது என்ற உணர்வுடன் சட்ட ரீதியிலான அனைத்து விதிமுறைகளையும் எங்கள் நிறுவனம் பின்பற்றி வருகிறது. தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்திருந்த 3 பேர் குழு தன்னிச்சையாக ஆய்வு மேற்கொண்டு, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து, அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு நீதிக்கு எதிரானது என்று, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் நிறுவனத் துக்கும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கும் சில நிபந்தனைகள் அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.
அறிக்கை மீதான இரு தரப்பு கருத்துகளையும் தெரிவிக்க தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர் லைட் நிறுவனம் தனது பணியாளர்கள், சுற்றுவட்டார கிராம மக்கள், பங்குதாரர்கள் மற்றும் தூத்துக்குடி மக்களின் நலனை கருத்தில் கொண்டே எப்போதும் செயல்பட்டுவந்தது. ஆலையை மூடியதால் பாதிக்கப்பட்டுள்ள 25 ஆயிரம் குடும்பங்களுக்கு மறுவாழ்வு கிடைக்கும் வகையிலும், ஸ்டெர்லைட் நிறுவனத்தை மீண்டும் திறக்கும் வகையிலும் இந்த வழக்கில் தீர்ப்பு வரும் என்று நம்புகிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
45 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago