கட்டிட விபத்து: 600 பேரிடம் புலன் விசாரணை - உயர் நீதிமன்றத்தில் அரசு அறிக்கை தாக்கல்

By செய்திப்பிரிவு

மவுலிவாக்கம் அடுக்குமாடிக் கட்டிட விபத்து தொடர்பாக 600 பேரிடம் புலன் விசாரணை நடத்தப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை மவுலிவாக்கத்தில் கடந்த ஜூன் 28-ம் தேதி அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து 61 பேர் இறந்தனர். சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி விசாரித்த நீதிபதிகள், சம்பவம் தொடர்பான தற்போதைய நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இவ்வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்திய நாராயணன் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி மவுலிவாக்கம் சம்பவம் தொடர்பான நிலவர அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் 61 பேர் உயிரிழந்தனர். 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவித் தொகையை வழங்கியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.ரெகுபதி தலைமையிலான விசாரணை கமிஷன் ஆகஸ்ட் 25-ம் தேதி தனது விசாரணை அறிக்கையை அரசிடம் அளித்துள்ளது. இந்த அறிக்கையும், கமிஷனின் பரிந்துரைப்படி மேற்கொள் ளப்பட்ட நடவடிக்கை விவரங்களும் சட்டப்பேரவை முன் வைக்கப்படும்.

இதுதவிர, இந்த சம்பவம் தொடர்பாக புலன் விசாரணை நடத்துவதற்காக காவல் துறை கூடுதல் துணை ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு, சம்பவம் பற்றி சுமார் 600 பேரிடம் புலன் விசாரணை நடத்தியது. சுமார் 200 ஆவணங்கள் ஆராயப்பட்டன.

334 சாட்சிகள்

இதன் தொடர்ச்சியாக இறுதி புலன் விசாரணை அறிக்கை (குற்றப்பத்திரிகை) கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி பெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பிரைம் சிருஷ்டி ஹவுசிங் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.மனோகரன் உட்பட 9 பேரை குற்றவாளிகளாக சேர்த்துள்ளோம். 334 சாட்சிகளும், 137 ஆவணங்களும் குற்றப்பத்திரிகையில் காட்டப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 13-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்