தருமபுரி மாவட்டம் சிட்லிங் மலை கிராமத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிளஸ் 2 மாணவி உயிரிழந்ததால் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரூர் வட்டம் கோட்டப்பட்டி அடுத்த சிட்லிங் மலை கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவர் மனைவி மலர். இந்தத் தம்பதியரின் மகள் சவுமியா (16). பாப்பிரெட்டிபட்டியில் தங்கி அங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். தீபாவளி விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த சவுமியா கடந்த 5-ம் தேதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் இயற்கை உபாதைக்காக வீட்டின் அருகேயுள்ள மறைவான பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த சதீஷ், ரமேஷ் ஆகிய 2 இளைஞர்களும் மாணவியைப் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். பின்னர் அவரைப் பலவந்தமாக ஆற்றோடைப் பகுதிக்கு தூக்கிச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர்.
இதற்கிடையில் அப்பகுதியில் ஆள் நடமாட்டம் தெரிந்ததால் இருவரும் மாணவியை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பியுள்ளனர். மயங்கிக் கிடந்த மாணவியை கிராம மக்கள் மீட்டு வீட்டில் சேர்த்துள்ளனர். வெளியில் சென்றிருந்த பெற்றோர் வீடு திரும்பிய பின்னர் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மாணவி கூறியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த பெற்றோர் கோட்டப்பட்டி காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீஸார், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தலைமறைவாகி விட்டதாகவும், அவர்களைத் தேடி வருவதாகவும் கூறி வந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தச் சம்பவத்தால் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவிக்கு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிகிச்சை பலனின்றி மாணவி இன்று (சனிக்கிழமை) காலை உயிரிழந்தார்.
எனவே, மாணவி உயிரிழப்புக்குக் காரணமானவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சவுமியாவின் உறவினர்கள் சிட்லிங் கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோட்டப்பட்டி காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து மறியலில் ஈடுபட்டவர்களைச் சமாதானப்படுத்தினர்.
இது குறித்து சவுமியாவின் உறவினர்கள் கூறும்போது, “நன்றாகப் படித்து நல்ல வேலைக்குச் சென்று, கூலித் தொழில் செய்யும் பெற்றோரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என அடிக்கடி சவுமியா கூறி வந்துள்ளார். குற்றவாளிகள் இருவரும் சவுமியாவை சிதைத்துக் கொன்றிருக்கிறார்கள். மருத்துவமனையில் இருந்த சவுமியா, அந்த 2 குற்றவாளிகளுக்கும் கடும் தண்டனை வாங்கிக் கொடுங்கள் என்று கூறிவிட்டு மூச்சடங்கியுள்ளார். இந்தச் சம்பவத்தில் காவல்துறையும், அரசு அதிகாரிகளும் நேர்மையாகச் செயல்பட்டு குற்றவாளிகள் இருவருக்கும் கடும் தண்டனை கிடைக்க துணை செய்ய வேண்டும்” என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago