சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை 40 சதவீதம் குறைவு 

By செய்திப்பிரிவு

சென்னை

இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை காலத்தில் இதுவரை சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வழக்கத்தைவிட 40 சத வீதத்துக்கு மேல் மழை குறைவாக பெய்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகத்துக்கு அதிக மழை கிடைப்பதில்லை. வட கிழக்கு பருவமழை காலத்தில் மட்டுமே தமிழகம் அதிக மழை பெறுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக வடகிழக்கு பருமழை காலத்தில் சராசரியைவிட குறைவாகவே மழை பெய்துள்ளது. இந்த ஆண்டும் அதே நிலை நீடித்து வருகிறது.

கடந்த அக்டோபர் 1 முதல் நவம்பர் 25-ம் தேதி வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம், புதுச்சேரியில் வழக்கமாக 335 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை 303 மி.மீ. மழைதான் பெய்துள்ளது. இது வழக்கத்தைவிட 10 சதவீதம் குறைவு. அதே நேரத்தில் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 40 சதவீதத்துக்குமேல் குறைவாக மழை பெய்துள்ளது.

அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 53 சதவீதமும் (118 மி.மீ.) தருமபுரி மாவட்டத்தில் 52 சதவீதமும் (131 மி.மீ.), சென் னையில் 46 சதவீதமும் (321 செ.மீ.), கரூரில் 46 சதவீதமும், (137 மி.மீ.), சேலத்தில் 43 சதவீத மும் (173 மி.மீ.), திருச்சி மாவட் டத்தில் 40 சதவீதமும் (180 மி.மீ.) மழை குறைவாக பெய்துள் ளது.

திருவாரூரில் அதிகம்

அதே நேரத்தில், திருவாரூர் மாவட்டத்தில் வழக்கத்தைவிட 31 சதவீதம் (607 மி.மீ.) அதிகமாகவும், திருநெல்வேலி மாவட்டத்தில் 29 சதவீதம் (445 மி.மீ.) அதிகமாகவும் மழை பெய்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

வானிலை ஆய்வு மைய தரவு களின்படி, வடகிழக்கு பருவமழை காலம் டிசம்பர் வரை உள்ளது. அதற்குள் மேலும் மழை கிடைக்க வாய்ப்புள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், புதுச் சேரியில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய வாய்ப் பில்லை.

ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் பூதபாண்டி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்