தமிழகம், புதுவையில் லேசான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதி காரிகள் கூறியதாவது:

தற்போது வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி களோ அல்லது வளிமண்டல மேல டுக்கு சுழற்சிகளோ இல்லை. அதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை வாய்ப்பு குறைந்துள்ளது. திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் நிறை வடைந்த 24 மணி நேரத்தில், எந்த பகுதியிலும் குறிப்பிடும்படியாக மழை பெய்யவில்லை.

அடுத்துவரும் 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கிழக்கு திசை காற்று மற்றும் வெப்பச் சலனத்தால் ஓரிரு இடங் களில் லேசான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய வாய்ப்பில்லை.

கடந்த அக்டோபர் 1 முதல் நவம்பர் 26-ம் தேதி வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வழக்கமாக 339 மி.மீ மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை 303 மிமீ மழை தான் பெய்துள்ளது. இது வழக்கத்தை விட 11 சதவீதம் குறைவு. சென்னையில் 602 மிமீ மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை 321 மிமீ மட்டுமே பெய்துள்ளது. இது இயல்பை விட 47 சதவீதம் குறைவு.

இவ்வாறு வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE