தமிழகத்தை நோக்கிவரும் “கஜா புயல்” கரையைக் கடக்கும் முன் வலுவிழந்த நிலையில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடலூர், வேதாரண்யம் இடையே வரும் 15-ம் தேதி கரையைக் கடக்க வாய்ப்பு இருக்கிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு மற்றும் அதைஒட்டிய மத்திய மேற்கு மற்றும் தென் கிழக்கு வங்கக்கடலில் “கஜா புயல்” கடந்த ஞாயிற்றுக்கிழமை காணப்பட்டது. இது மேற்கு நோக்கி நகர்ந்து, மத்திய மேற்கு மற்றும் அதைஒட்டிய மத்திய கிழக்கு தென்கிழக்கு, தென்கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டது.
தற்போது, மேற்கு மற்றும் தென்மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. வரும் 15-ம் தேதி கஜா புயல் கரையை கடக்க வாய்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், “தமிழ்நாடு வெதர்மேன்” பதிவில் எழுதிவரும் பிரதீப் ஜான் இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: “கஜா புயல்” முழுமையாக வித்தியாசமான திசையில் செல்கிறது. ஆழ்ந்த புயலாகத் தொடங்கிய “கஜா புயல்” கரையைக் கடக்கும் முன் வலுவிழந்து, வலுவிழந்த நிலையிலேயே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 15-ம் தேதி காலை முதல் நண்பகலுக்குள் கடலூர் மற்றும் வேதாரண்யம் இடையே கரையைக் கடக்கும். வர்தா, தானே புயல் போன்று கஜா புயல் கடுமையானதல்ல, அதை நினைத்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. சில மாடல்களில் பாம்பன் அல்லது இலங்கை பகுதியில் கஜா புயல் கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு நிகழவாய்ப்பில்லை என்று என்னுடைய ஆய்வில் தெரிகிறது. பெரும்பாலும், வேதாரண்யம் மற்றும் கடலூர் இடையே கஜா புயல் கரையைக்கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
சென்னையில் எப்படி மழை இருக்கும்?
சென்னையைப் பொறுத்தவரை, புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் இழுவை காரணமாக பரவலாக மழை பெய்யும். நாளை(14-ம்தேதி) முதல் 17-ம் தேதிவரை சென்னையில் மழை இருக்கும், அச்சப்படும் அளவுக்கு மழை இருக்காது. ஆதலால், வாட்ஸ்அப், பேஸ்புக்கில் பரப்பிவிடப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். கஜா புயல் கரைக் கடக்கும் போது பலத்த மழையை தருவிக்கும். குறிப்பாக தென் மாவட்டங்கள், தமிழகத்தின் உள்மாவட்டங்கள், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. புயல் கரையைக் கடக்கும் போது காற்று மணிக்கு 60 முதல் 80 கி.மீ வேகத்திலும், ஒரு சில நேரத்தில் 90 கி.மீ வேகத்திலும் காற்றுவீசக்கூடும்.
ஆனால், வர்தா, தானே புயலின்போது அடித்த காற்றைப் போல் பலமாக இருக்காது. தமிழகத்துக்கு அடுத்துவரும் 15 நாட்களுக்கு நல்ல மழை இருக்கும். கஜா புயல் சென்ற பிறகு அடுத்த ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை வருகிறது. இவையெல்லாம் எனது தனிப்பட்ட கருத்துக்கள். நிர்வாகரீதியான விஷயங்களுக்கு அரசின் அதிகாரப்பூர்வமான நிறுவனத்தை பின்பற்றவும்
இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
32 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago