‘கஜா’ புயல் பதிப்பு காரணமாக சென்னையில் தேங்காய் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இந்திய அளவில் தென்னை பயிரிடும் பரப்பு மற்றும் தேங்காய் உற்பத்தியில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 4 லட்சத்து 61 ஆயிரத்து 60 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேங்காய் உற்பத்தி திறன் ஒரு ஹெக்டேருக்கு 14 ஆயிரத்து 251 தேங்காய்களாக உள்ளன. வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு உற்பத்தி திறன் இல்லை. தமிழகத்தில் ஆண்டுதோறும் 657 கோடி தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
தேங்காய் சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியில் தமிழக அளவில், தஞ்சாவூர் மாவட்டம் 2-வது இடத்திலும், புதுக்கோட்டை மாவட்டம் 12-வது இடத்திலும், திருவாரூர் மாவட்டம் 15-வது இடத்திலும், நாகப்பட்டினம் மாவட்டம் 16-வது இடத்திலும் உள்ளன. தமிழகத்தின் ஒட்டு மொத்த சாகுபடி பரப்பில் ஆண்டுக்கு 12.42 சதவீதமும் (54 ஆயிரத்து 142 ஹெக்டேர்), மகசூலில் 19.72 சதவீதமும் (92 கோடியே 84 லட்சம் தேங்காய்) இந்த 4 மாவட்டங்களின் பங்களிப்பாக இருந்தது.
புயல் தாக்கியதில் இந்த 4 மாவட்டங்களில் சுமார் 45 லட்சம் தென்னை மரங்கள் அழிந்ததாக அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் அழிந்து விட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர். இனி அப்பகுதி யில் தென்னை விவசாயம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப குறைந்தபட்சம் 6 முதல் 10 ஆண்டுகள் வரை ஆகலாம். அதனால் அப்பகுதி தென்னை விவசாயிகள் பலர் விரக்திக்குள்ளாகியுள்ளனர். இந்த துயரத்தை தாங்க முடியாமல், சில தினங்களுக்கு முன்பு ஒரு தென்னை விவசாயி தற்கொலை செய்து கொண்டார். மற்றொருவர் மாரடைப் பால் உயிரிழந்தார்.
50 சதவீதம் டெல்டா மாவட்டங்களில்...
கோயம்பேடு சந்தைக்கு வரும் தேங்காய் களில் 50 சதவீதம் டெல்டா மாவட்டங்களில் இருந்துதான் வருகின்றன. தற்போது அங்கு பெரும்பாலான தென்னை மரங்கள் புயலால் அழிந்துவிட்ட நிலையில் கோயம்பேடு சந்தைக்கு தேங்காய் வரத்து குறைந்து, அவற்றின் விலை உயர்ந்து வருகிறது.
இதுதொடர்பாக கோயம்பேடு சந்தை தேங்காய் வியாபாரிகள் நலச் சங்க செயலர் ஏ.டான்பாஸ்கோ கூறியதாவது:
கோயம்பேடு சந்தைக்கு தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் மற்றும் கர்நாடகா, ஆந்திரா ஆகிய இடங்களில் இருந்து தேங்காய் கொண்டுவரப்படுகிறது. தினமும் 100 லோடு தேங்காய் கோயம்பேடு சந்தைக்கு வரும். அதில் 50 லோடு தேங்காய் டெல்டா மாவட்டங்களில் இருந்து வந்துகொண்டிருந்தது. தற்போது அங்கு புயலால் தென்னை மரங்கள் அழிந்துவிட்ட நிலையில், அங்கிருந்து தேங்காய் வரத்து குறைந்துள்ளது. அதன் காரணமாக அவற்றின் விலையும் உயரத் தொடங்கியுள்ளது.
ரூ.60 வரை உயரும்
இந்த சந்தையில் மொத்தம் 110 தேங்காய் கடைகள் உள்ளன. புயலுக்கு முன்பு வரை தோல் உரித்த தேங்காய் ஒரு கிலோ ரூ.23-க்கு வாங்கி வந்தோம். கிலோ ரூ.27 வரை விற்பனை செய்வோம். வரத்து குறைந்திருப் பதால், எங்களுக்கே கிலோ ரூ.28-க்குதான் கிடைக்கிறது. அதை ரூ.32-க்கு விற்று வருகிறோம். இது சிறு கடைகளுக்கு செல்லும்போது ரூ.60 வரை உயரும்.
டெல்டா மாவட்ட தேங்காய் விவசாயிகளின் துக்கத்தில் கோயம்பேடு சந்தை தேங்காய் வியாபாரிகள் அனைவரும் பங்கேற்க விரும்புகிறோம்.
அதற்காக டெல்டா மாவட்ட தென்னை விவசாயிகளுக்கு 1 லட்சம் தென்னங்கன்றுகளை இலவசமாக வழங்க திட்டமிட்டிருக்கிறோம்.
இவ்வாறு ஏ.டான்பாஸ்கோ கூறினார்.
தேங்காய் விலை உயர்வு காரணமாக, வெளிச்சந்தையில் சில்லறை விலையில் ரூ.24 முதல் ரூ.30 வரை விற்கப்பட்டு வந்த ஒரு தேங்காய், இனி ரூ.30 முதல் ரூ.40 வரை உயர வாய்ப்புள்ளதாக சில்லறை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
14 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago