புறநகரில் தற்காலிக பஸ் நிலையம் அமையுமா?: தீபாவளி நெரிசலை சமாளிக்க பயணிகள் எதிர்பார்ப்பு

By செய்திப்பிரிவு

தீபாவளி பண்டிகையை முன் னிட்டு போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில் சென்னை புறநகர் பகுதியில் தற் காலிக பேருந்து நிலையம் அமைக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து தமிழகம், புதுவை, ஆந்திரா, கர்நாட காவுக்கு விரைவு பஸ்கள் இயக்கப் படுகின்றன. பண்டிகை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட் களில் வழக்கத்தை காட்டிலும் சுமார் 1000க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆம்னி பஸ்களும் கூடுதலாக இயக்கப் படுகின்றன. இதனால், பண்டிகை சமயங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சென்னை மாநகரின் பல்வேறு பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. சென்னை மாநகரை கடந்து புறநகர் பகுதிக்கு பஸ் கள் செல்லவே இரண்டு மணி நேரத்துக்குக்கும் மேல் ஆகி விடுகிறது. இதனால், பயணி கள் மனஉளைச்சலுக்கு ஆளா கின்றனர்.

இது தொடர்பாக கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்த பயணி கள் கூறும்போது, ‘‘சாதாரணமாக 3 நாட்கள் தொடர் விடுமுறை வந்து விட்டாலே, கோயம்பேடு பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நூற்றுக் கணக்கில் பஸ்களை அதிகரித்து இயக்குகின்றனர். ஆனால், இந்த பஸ்கள் வெளியே செல்ல வழி எங்கு இருக்கிறது? கடுமையான போக்குவரத்து நெரிசலால் பல மணிநேரம் சாலையிலேயே காத்திருக்க வேண்டியுள்ளது. அதற்கு புறநகர் பகுதியில் தற்காலிக பஸ்நிலையம் அமைத்து பஸ்களை பிரித்து இயக்கினாலே போதும், போக்குவரத்து நெரி சலை குறைக்க முடியும். மக்க ளும் நிம்மதியாக பயணம் செய்ய முடியும்’’ என்றனர்.

தற்காலிக பஸ்நிலையம் அமைக்கப்படுமா?

இது தொடர்பாக போக்குவரத்து துறையின் உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பண்டிகை நாட்க ளில் கோயம்பேடு பஸ்நிலையத் தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தற்போது ரயில் கட்டணமும், ஆம்னி பஸ் கட்டணமும் அதிகரித் துள்ளது.

எனவே, அரசு பஸ்களில் பயணிப்போரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இதனால், இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட 15 சதவீதம் கூடுதல் பஸ்கள் இயக்கவும் முடிவு செய்துள்ளோம்.

போக்குவரத்து போலீஸ் மற்றும் போக்குவரத்து துறை உயர் அதிகாரிகளின் கூட்டம் விரைவில் நடக்கவுள்ளது. அதில், நெரிசலை சமாளிக்க புறநகர் பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் அமைப்பது குறித்து பரிந்துரைக்கப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE