நடப்பு நிதியாண்டில் 377 கிளைகள் திறக்க சிண்டிகேட் வங்கி முடிவு

By செய்திப்பிரிவு

நடப்பு நிதியாண்டில் 377 கிளைகளைத் திறக்க, சிண்டிகேட் வங்கி முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, சிண்டிகேட் வங்கியின் சென்னை மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கடந்த ஜூன் 30ம் தேதியுடன் முடிந்த காலாண்டின் முடிவில், சிண்டிகேட் வங்கி 485 கோடியே 42 லட்ச ரூபாய் நிகர லாபத்தை பெற்றுள்ளது. கடந்த காலாண்டின் முடிவில் பெற்ற லாபத்தை விட, இது 7 சதவீதம் அதிகமாகும்.

இதேபோல் மொத்த வருவாயின் அளவு சுமார் 17 சதவீதம் உயர்ந்து, 5,523 கோடியே 8 லட்சம் ரூபாயாக உள்ளது. நடப்பு நிதியாண்டில், 350 கிளைகள், 27 இடைநிலை கார்ப்பரேட் கிளைகள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் குறிப்பாக ஹாங்காங், துபாய் நிதி மையம், ஜோகன் னஸ்பர்க் மற்றும் சீனா ஆகிய இடங் களில் புதிய கிளைகள் திறக்க அனுமதி கிடைத்துள்ளது.

காப்பீடு சார்ந்த புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தவும், தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சிறப்புநிதித் திட்டம் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE