துல்லியமான கணிப்பு, கூட்டு மனப்பான்மையுடன் நிவாரண பணி: பேரிடர்களை எதிர்கொள்ள நிரந்தர நடைமுறை அவசியம் - அமெரிக்காவை பின்பற்ற தொழிலதிபர் பழனி ஜி.பெரியசாமி யோசனை

By டி.செல்வகுமார்

இயற்கை பேரிடர்களின்போது, அமெரிக்காவில் இருப்பதுபோன்ற நிரந்தர நடைமுறையை பின்பற்று வது அவசியம் என்று அமெரிக் காவில் வசித்த தமிழக தொழில திபர் பழனி ஜி.பெரியசாமி தெரி வித்துள்ளார்.

‘கஜா’ புயல் 12 மாவட்டங்களைச் சூறையாடியுள்ளது. வீடு, நிலம், கால்நடைகள், தோட்டம், மரங்கள் என ஏராளமான மக்கள் வாழ்வா தாரங்களை இழந்து நிற்கின்றனர்.

இந்நிலையில், இயற்கை பேரிடர் ஏற்படும்போது அமெரிக்காவில் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகள் குறித்து, அங்கு 30 ஆண்டு களுக்கும் மேலாக வசித்தவரும், தமிழக தொழிலதிபருமான பழனி ஜி.பெரியசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

நிரந்தர நடைமுறை

இயற்கைப் பேரிடரை எதிர் கொள்ள அமெரிக்காவில் ‘FEMA-1979 Act’ (Federal Emergency Management Act) என்ற சட்டம் உள்ளது.

புயலின் போக்கு மற்றும் தாக் கத்தை துல்லியமாக கணிக்கவும், 100 சதவீத முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் எடுக்கவும், முழுவீச் சில் நிவாரணப் பணிகளை மேற் கொள்ளவும் நிரந்தர நடை முறையை (Permanent Procedure) உருவாக்கி வைத்துள்ளனர்.

அதன்படி, புயல் பாதிப்பு எந்த நகரில் அதிகம் இருக்குமோ, அங்கு உள்ள மக்களை வெளி யேற்ற தனி பாதை வைத்துள்ளனர். அந்த பாதையில் 12 மணி நேரத்தில் எவ்வளவு பேர் செல்வார்கள், எத்தனை வாகனங்கள் செல்லும் என்பதை கணித்து, அதற்கேற்ற திறனுடன் (Road Capacity) கூடிய சாலையை உருவாக்கி வைத்துள்ள னர். இத்தகைய கட்டமைப்பு அனைத்து நகரங்களிலும் இருப் பது சிறப்பு.

நிவாரணத்திலேயே கவனம்

புயல் கரையைக் கடந்ததும், அரசு மட்டுமின்றி அனைத்து கட்சியினர், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என எல்லா தரப் பினரும் எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் உடனடியாக களத் தில் இறங்கி நிவாரணப் பணிகளை மேற்கொள்கின்றனர்.

யாரும், யாரையும் குறை சொல்வது இல்லை. நிவாரணப் பணிகளை விரைந்து முடிப்பதி லேயே அனைவரது கவனமும் இருக்கும். இயல்புநிலைக்கு திரும் பிய பிறகு, நிவாரணப் பணிகளில் குறை இருந்தால் எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டுகின்றனர். அதுபோன்ற கலாச்சாரம் தமிழகத்தில் வர வேண்டும்.

தமிழகத்தில் 12 மாவட்டங்களை ‘கஜா’ புயல் சூறையாடியிருக்கிறது. இதுபோன்ற நேரத்தில் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்க்காமல், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, பொது மக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் ‘ஊர்கூடி தேர் இழுப்பதுபோல’ கூட்டு மனப்பான்மையுடன் நிவா ரணப் பணிகளில் ஈடுபட்டால் விரைவில் இயல்புநிலை திரும் பும். அதை விடுத்து, குறை சொல்லு தல், போராட்டம் நடத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட் டால் நிவாரணப் பணிகள் தடை படுவதுடன், மக்களுக்கு வலியும், வேதனையும்தான் மிஞ்சும். இதை அனைத்து தரப்பு மக்களும் உணர வேண்டியது அவசர, அவசியம்.

கற்கவேண்டிய பாடம்

புயல்கள் தாக்கியபோது, ‘இழப் பீடு வழங்கினோம்; நிவாரணப் பணிகளை செய்தோம்’ என்பதோடு நின்றுவிடாமல், இந்த புயல் மூலம் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு, எதிர்காலத்தில் புயல் பாதிப்பை திறம்பட கையாளும் திறனைப் பெறவேண்டும். அதற்காக விஞ்ஞானிகள் கொண்ட தனி குழு ஏற்படுத்த வேண்டும். அவர்களை அமெரிக்காவுக்கு அனுப்பி, அங்கு பேரிடர் காலங்களில் செய்யப்படும் கணிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஒருங்கிணைந்த நிவாரணப் பணிகள் ஆகியவற்றின் நடைமுறைகளை அறிந்துவரச் செய்ய வேண்டும். பின்னர் நம் நாட்டு மக்கள்தொகைக்கு ஏற்ற செயல்திட்டத்தை உருவாக்குவது எதிர்காலத்தில் மிகவும் பலன் அளிக்கும்.

தொலைநோக்கு திட்டங்கள்

முக்கியமாக, இப்போதைக்கான குறுகியகால திட்டங்களோடு, தொலைநோக்குப் பார்வையிலான திட்டங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

வெளிநாடுகள்போல, தகவல் தொடர்பு சாதனங்கள், மின் பாதை போன்றவற்றை பூமிக்கு அடியில் கொண்டுசெல்ல நவீன கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

இவ்வாறு பழனி ஜி.பெரியசாமி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்