ஆட்டோக்களில் 3 பேருக்கு மேல் ஏற்றிச் சென்றால் பர்மிட் ரத்து செய்யப்படும் என்று போக்கு வரத்து துறை தெரிவித்துள்ளது.
ஆட்டோக்களில் அளவுக்கதிக மாக பயணிகளை ஏற்றிச் செல்வ தால் அடிக்கடி சாலை விபத்து கள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, உயர் நீதிமன்றத் திற்கு வந்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை காட்டிலும் அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டு இருந்தது. இதை யடுத்து, பயணிகளை அதிகமாக ஏற்றிசெல்லும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை களமிறங்கியுள்ளது.
இதன்படி ஆட்டோக்களில் 3 பேருக்கு மேலும், ஷேர் ஆட்டோக் களில் 5 பேருக்கு மேலும் ஏற்றிச் சென்றால் அதன் பர்மிட் சஸ் பெண்ட் செய்யப்படும் என போக்கு வரத்து துறை தெரிவித்துள்ளது. இதை கண்காணிக்க தலா 3 பேர் கொண்ட 12 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக போக்குவரத்து துறையின் உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஆட்டோக்களில் நிர்ணயிக்கப்பட்டதை காட்டிலும் ஆட்களை ஏற்றிச் சென்றால் நீதி மன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தந்த ஆர்டிஓக்கள் மூலம் அறிவுறுத்தப் பட்டுள்ளது. அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்கள் முதல்முறையாக பிடிபடும்போது, சம்பந்தப்பட்ட ஆட்டோவின் உரிமம் சஸ்பெண்ட் செய்யப்படும். தொடர்ந்து 3 முறை சிக்கினால் பர்மிட்டை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
காலக்கெடு தேவை
இது தொடர்பாக தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் சம் மேளன (ஏ.ஐ.டி.யு.சி) மாநில பொது செயலாளர் சேஷசயனம் கூறும்போது, “போக்குவரத்து துறையின் அறிவிப்பால் ஆட்டோ தொழிலாளிகள் கலக்கத்தில் உள்ளனர். எனவே, அதிக பயணி களை ஏற்றி செல்வதை தடுப்பது குறித்து ஒவ்வொரு ஆர்டிஓக்களி லும் கூட்டம் நடத்த வேண்டும். இதன் அவசியத்தை பற்றி தொழி லாளர்களிடம் விளக்க வேண்டும். பின்னர், படிப்படியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக ஆட்டோ தொழிலாளிகளுக்கு குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு காலஅவகாசம் கொடுக்க வேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago