ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தின் கடலூர் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் 18 பேர் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக மன்றப் பொறுப்புகளில் இருந்து கடந்த 15 தினங்களுக்கு முன்பு நீக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் தற்போது ரஜினி மக்கள் மன்றத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என கோரி, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து மன்னிப்புக் கோர திட்டமிட்டு இன்று சென்னை சென்றுள்ளனர்.
இது தொடர்பாக ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளர் ஓ.எல்.பெரியசாமியிடம் கேட்டபோது, “அண்மையில் எங்கள் தலைவரின் அறிக்கையைப் பார்த்து, அவரின் மனம் வருத்தப்படும் அளவுக்கு நாங்கள் நடந்துகொண்டோம் என புரிந்தது. சரியான புரிதல் இல்லாததாலும், இல்லாத காரணத்தினாலும், எங்கள் தலைவரின் எண்ணங்களை நாங்கள் சரியாக புரிந்து கொள்ளாததாலும் சில தவறுகள் செய்துவிட்டோம் என்பது உணர்ந்துள்ளோம். இனி தலைவர் யாரை கை காட்டினாலும், அவர்களோடு களப்பணியாற்ற நாங்கள் தயார். எங்களுக்கு பதவி முக்கியமல்ல. அதனால் சுய விருப்பு வெறுப்பின்றி தலைவர் எதிர்பார்க்கும் பணியை சீர்மேற்கொண்டு அவரை ஆட்சியில் அமரவைக்க உழைப்போம்.
எங்கள் தலைவர் மீது வைத்துள்ள அளவில்லாத நேசத்தால், நாங்கள் ஊடகங்கள் வாயிலாக ரஜினியிடம் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். எதிரிகளையும் மன்னித்து ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கொண்ட, அவர் எங்களையும் ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த அடிப்படையின் கீழ் நாங்கள் அனைவரும் கையொப்பமிட்ட கடிதத்தை சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளோம். தலைவர் எங்களை மன்னித்து மக்கள் மன்றத்தில் மீண்டும் இணைத்துக் கொள்வார் என நம்புகிறோம்.மேலும் மன்றத்தின் விதிகள், கட்டுப்பாடுகள் மற்றும் கட்டளைக்குட்பட்டு, நடந்துகொள்வோம். எங்களது முழு சக்தியையும் களப்பணியில் ஈடுபட்டு, எங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்றுவோம்”, என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago