தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களில் சிலர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், பாதிப்பை உறுதிப்படுத்தும் சோதனை இருப்பது குறித்து மக்களுக்கு தெரியாததால்தான் உயிரிழப்பு கள் ஏற்படுவதாக வாட்ஸ்அப்பில் ஒருவர் ஆடியோ பதிவை வெளியிட்டிருந்தார். அந்த ஆடி யோவில், “ஆரம்ப நிலையில் பன்றிக்காய்ச்சலை கண்டறிய எங்களுக்கு எந்தவித வாய்ப்பும் இல்லாம போயிடுச்சு. அதனால எங்க வீட்டில ஒரு உயிர இழந் துட்டோம். மேற்கொண்டு இது போலஉயிரிழப்புகள் தடுக்கப் படணும்னா, பன்றிக் காய்ச்சல உறுதிப்படுத்துற ‘ஸ்வாப் டெஸ்ட்’ பற்றிய விழிப்புணர்வு தேவை.
இதுபோன்ற பரிசோதனை இருப்பது பற்றி சுகாதாரத் துறையோ, அரசோ மக்களிடம் ஏன் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை” என்று ஆதங் கத்துடன் கேள்வி எழுப்பி யிருந்தார்.
இதுகுறித்து சுகாதாரத் துறை இணை இயக்குநர் (கொள்ளை நோய்கள்) பி.பிரேம்குமார் கூறியதாவது:
யாருக்கேனும் சளி, இருமல், காய்ச்சல் இருந்தால், அது சாதாரண காய்ச்சலாக இருக் கலாம் அல்லது வைரஸ் காய்ச்சலாகவும் இருக்கலாம். மக்களால் அதை கண்டறிய முடியாது. ஆரம்ப நிலையில் மருத்துவர்கள் கண்டறிய உதவும் வகையில் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளை ஏ,பி,சி என 3 வகையாக பிரித்துள்ளோம்.
லேசான காய்ச்சல், சளி, இருமல், தொண்டைவலி இருந் தால் அதை ஏ எனவும், தொடர்ந்து அதிக காய்ச்சல், தொண்டை வலி இருந்தால் அதை பி எனவும், காலையில் லேசான காய்ச்சல் இருந்து, மாலையில் திடீரென காய்ச்சல் அதிகமாவது, மூச்சுத் திணறுவது, கடுமையான சோர்வு ஆகிய அறிகுறிகள் இருந்தால் அதை சி எனவும் பிரித்துள்ளோம்.
இதில், ஏ, பி வகை பாதிப்பு உள்ளவர்கள் பரிசோதனை மேற்கொள்ளத் தேவையில்லை. பன்றிக் காய்ச்சல் பாதிப்புக் குள்ளானவர்களுக்கு டாமி ஃபுளூ மாத்திரைகளை முன்கூட்டியே அளித்தால்தான் பலனளிக்கும். எனவே, பாதிப்பு இருக்கிறது என சந்தேகப்படும் நபர்கள் பி பிரிவில் உள்ளபோதே, அவர் களுக்கு டாமி ஃபுளூ மாத்திரை களை அளிக்குமாறு மருத்துவர் களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். மாத்திரை அளிக்க தாமதிக்கும் போது அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
ஒரே நாளில் முடிவு
சி பிரிவில் இருப்பவர்களுக்கு ஸ்வாப் பரிசோதனை (Throat Swab test) மூலம் பன்றிக் காய்ச் சலை உறுதிப்படுத்த முடியும். இந்த பரிசோதனை, எச்1என்1 ஆர்டி-பிசிஆர் (H1N1 RT-PCR) முறையில் மேற்கொள்ளப்படு கிறது. பரிசோதனைக்காக தொண்டை பகுதியில் இருந்து சளி மாதிரி எடுக்கப்படும். மூக்கு வழியாகவும் மாதிரி எடுக்கலாம். காலையில் பரிசோதனை மேற் கொண்டால் பெரும்பாலும் மாலைக்குள் முடிவு தெரிந்து விடும். மாலை பரிசோதனை மேற்கொண்டால் மறுநாள் முடிவு கிடைத்துவிடும்.
சளி மாதிரி எடுத்த பின்னர் உடனே டாமி ஃப்ளூ மாத்திரை உட்கொள்ள வேண்டும். சோதனை முடிவில் பன்றிக் காய்ச்சல் இல்லை அல்லது இருக்கிறது என்று எப்படி முடிவு வந்தாலும், மாத்திரைகளை தொடர்ந்து 5 நாட்களுக்கு கட்டாயம் சாப்பிட வேண்டும். குழந்தைகளாக இருந்தால் கூடுதலாக 5 நாட்கள் மாத்திரை சாப்பிட வேண்டும்.
இதேபோல, பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் டாமி ஃபுளூ மாத்திரைகளை அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். சி பிரிவில் உள்ள வர்களை கட்டாயம் மருத்துவ மனையில் அனுமதித்து கிசிச்சை அளிக்க வேண்டும். முழுமையாக குணமடையும் வரை அவர்கள் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.
கட்டணம் எவ்வளவு?
சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட், சென்னை, கோவை, திருநெல்வேலி, மதுரை, தேனி, சேலம் அரசு மருத்துவக் கல்லூரிகள், திருச்சி யில் உள்ள கிஆபே விசுவ நாதன் மருத்துவக் கல்லூரி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஆகிய 9 இடங்களில் அரசு சார்பில் ‘ஸ்வாப்’ பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. இங்கு இலவசமாக பரிசோதனை செய்யப்படுகிறது.
இதுபோக, சென்னை, கோவை, திருச்சி, நாகர்கோவில், வேலூர், சேலம் ஆகிய இடங்களில் அரசு அங்கீகரித்து அனுமதி வழங்கியுள்ள 16 தனியார் ஆய்வுக்கூடங்களில் பரிசோதனை மேற்கொள்ளலாம். தனியார் ஆய்வகங்களில் இந்த பரிசோதனைக்கு ரூ.3,750 கட்டணமாக நிர்ணயித்துள்ளோம். பாதிக்கப்பட்டவர்கள் தவிர, மருத்துவரின் அறிவுறுத்தல் இல்லாமல் மற்றவர்கள் இந்த பரிசோதனை மேற்கொள்வது தேவையற்றது. பன்றிக்காய்ச்சல் குறித்த சந்தேகங்கள், கூடுதல் விவரங்கள், புகார்கள் ஏதும் இருந்தால் 104 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு பிரேம்குமார் கூறினார்.
பன்றிக்காய்ச்சல் பரிசோதனையை மேற்கொள்ளும் அரசு ஆய்வகங்கள்
* கிங் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ப்ரெவென்டிவ் மெடிசன், கிண்டி
* கோவை மருத்துவக் கல்லூரி
* திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி
* சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வு மையம்
* கே.ஏ.பி.விஸ்வநாதன் மருத்துவக் கல்லூரி, திருச்சி
* மதுரை மருத்துவக் கல்லூரி, மதுரை
* ஜிப்மர் மருத்துவமனை, புதுச்சேரி
பன்றிக்காய்ச்சல் பரிசோதனையை மேற்கொள்ளும் அரசு அனுமதி பெற்ற தனியார் ஆய்வகங்கள்
* பாரத் ஸ்பெஷாலிட்டி லேப், சென்னை.
* ஹைடெக் டயக்னோஸ்டிக்ஸ் சென்டர், சென்னை.
* லிஸ்டர் மெட்ரோபொலிஸ் லேப், ரிசர்ச் சென்டர்
* ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ மையம், போரூர்
* வி.ஆர்.ஆர். டயக்னோஸ்டிக்ஸ் சர்வீஸ், தி.நகர், சென்னை.
* இம்மியுனோ அன்சிலரி க்ளினிக்கல் சர்வீசஸ், கோவை
* மைக்ரோபயாலஜிக்கல் லேபரட்டரி, கோவை
* விவேக் லேபரட்டரிஸ், நாகர்கோவில்
* டாக்டர்ஸ் டயக்னோஸ்டிக்ஸ் சென்டர், திருச்சி
* ப்ரீமியர் ஹெல்த் சென்டர், சென்னை
* ஸ்டார் பயோடெக் சொல்யூஷன், சென்னை
* கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ், வேலூர்
* மாலிக்குலர் டயக்னோஸ்டிக்ஸ் லேபரட்டரி, அப்போலோ மருத்துவமனை, சென்னை.
* பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோவை
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago