சேலம் அருகே கணவரைப் பிரிந்து வாழ்ந்து வரும் பெண் மீது ஆசிட் வீச்சு

By வி.சீனிவாசன்

சேலம் அருகே கணவரைப் பிரிந்து வாழ்ந்து வரும் பெண் மீது ஆசிட் வீசிய நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சேலம் குகை பகுதியில் வசித்து வருபவர் காயத்ரி (வயது 31). இவரது கணவர் பாலமுருகன். இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்குத் திருமணமாகி 14 வருடங்கள் ஆகின்றன. இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கும் காயத்ரிக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சீனிவாசனுடனான நட்பை காயத்ரி நிறுத்திக்கொண்டதால் தொடர்ந்து பழகுமாறு சீனிவாசன் வற்புறுத்தியுள்ளார். இதற்கு காயத்ரி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன் இன்று (திங்கள்கிழமை) காலை வழக்கம்போல் தன் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல காயத்ரி வீட்டைவிட்டு வெளியே வந்தபோது கையில் மறைத்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலை வீசியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த காயத்ரி சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து செவ்வாப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தப்பிச் சென்ற சீனிவாசனைத் தேடி வருகின்றனர். மேலும் சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட குற்றவியல் நீதிபதி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயத்ரியிடம் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்