மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை மறைக்கப் பயன்பட்ட மலர் அலங்காரம்

By எஸ்.சுந்தர்

தமிழகத்தின் வெகுஜனக் கலாச்சாரத்தில் தலைவர்கள் சிலைகள், மாலைகள், அரசியல் அனைத்தும் விட்டு நீங்கா தொடர்புடையவையாகும்.  இதற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்ததின சிலை மாலை அணிவிப்பு நிகழ்ச்சிகளும் விதிவிலக்கல்ல.

மதுரை, கோரிப்பாளையன் சாலை சந்திப்புக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாகனம் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் சிலையின் மிகப்பெரிய பீடத்தில் இருக்கும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் பொறிக்கப்பட்ட பகுதியை மறைக்க அதிகாரிகள் கடுமையாக முயற்சி மேற்கொண்டனர்.

இது 1974-ல் அப்போதைய குடியரசுத் தலைவர் விவி. கிரி, கருணாநிதி முன்னிலையில் தேவர் சிலையைத் திறந்த போது கருணாநிதி பெயர் பொறிக்கப்பட்டது.

பணியாளர்கள் சிலர் மல்லிகைப்பூச்சரத்தினால் பீடத்தை அலங்கரித்துக் கொண்டிருந்தவர்கள் முதலில் வெள்ளைத்துணியால் கருணாநிதி பெயர் பொறிக்கப்பட்ட பெயரை மறைக்க முயற்சி செய்தனர். ஆனால் ஒருவேளை எதிர்க்கட்சிகளிடமிருந்து பலத்த எதிர்ப்பு வரலாம் என்று எண்ணியோ என்னவோ, பூச்சரங்களை கூடுதலாகத் தொங்க விட்டு கருணாநிதி பெயரை பகுதியளவில் மறைத்தனர்.

இன்று காலை 7 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த போது மாவட்ட பொது உறவுகள் அலுவலக பணியாளர் இருவரையும் சிலைக்கு மாலை அணிக்க வழிநடத்தினார்.

ஆனால் அப்போதைய சூரிய வெளிச்சம் இருவரும் மாலையிடுவதைப் படம் பிடிக்க விடாமல் பல ஊடகவியலாளர்களுக்கு இடையூறாக இருந்தது.

முதல்வரும் துணை முதல்வரும் தேவர் சிலைக்கு மிகப்பெரிய ரோஜா மாலையை அணிவித்து அங்கிருந்து புறப்பட்டவுடன், அங்குள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வர், துணை முதல்வர் அணிவித்த மாலை பிறர் மாலையிடும் போது அகற்றப்படக் கூடாது, பிறர் அணிவித்த மாலைகளை அவ்வப்போது அகற்றிக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிகிறது.  நிறைய பேர் சிலைக்கு மாலை அணிவிக்க பெரிய பெரிய மாலைகளுடன் காத்திருந்தனர். ஆனால் முதல்வர், துணை முதல்வர் அணிவித்த மாலைகளை அகற்றாமல் பிற மாலைகளையும் அணிவிக்க அனுமதித்து அவ்வப்போது இந்த பிற மாலைகளை அகற்றிக் கொள்ளலாம் என்பது உத்தரவு போலும்.

“மற்ற மாலைகளை அவ்வப்போது அகற்றிக் கொள்ளலாம் ஆனால் இவர்கள் இருவரும் அணிவித்த மாலை அகற்றப்படக்கூடாது” என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

மூலம்: தி இந்து (ஆங்கிலம்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 secs ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்