மேட்டூர் அருகே திருஷ்டி பூசணிக்காய் வழுக்கியதில் விழுந்து, லாரி சக்கரத்தில் சிக்கியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவர், மேட்டூர் அருகேயுள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் இரவு நேரக் காவலாளியாகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்து சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சாலையில் உடைக்கப்பட்ட திருஷ்டி பூசணிக்காய் மீது வண்டி சக்கரம் ஏறி வழுக்கி விழுந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த லாரி சக்கரத்தில் சிக்கி ரங்கசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சாலையில் பூசணிக்காயை உடைப்பவர்கள் அதை மீண்டும் அப்புறப்படுத்தாமல் விடுவதால் இத்தகைய உயிரிழப்புகள் நிகழ்கின்றன. இதனால், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் பூசணிக்காயை அகற்றிவிட வேண்டும் என்று போலீஸார் அறிவுறுத்தினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago