முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றுவிட்டதாகக் கூறி, தன்னை ஏமாற்றி இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டதாக தலைமைக் காவலர் மீது பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருபவர் அஜித் குமார் (45). இவருக்கும், கரூரைச் சேர்ந்த தனியார் பள்ளியில் பணிபுரியும் ஒரு பெண்ணுக்கும், கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்ததாகவும், பின்னர் அந்தப் பெண் அஜித்குமாரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அஜித் குமார், தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் கிராம நாட்டாண்மை நெல்சனை அணுகி, “எனது மனைவி இன்னொருவருடன் வாழ்ந்து வருகிறார். 13 ஆண்டுகளாக மறுமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறேன். தற்போது, எனது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை. அதனால், திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். உங்கள் கிராமத்தில் பெண் இருந்தால் சொல்லுங்கள்” எனக் கூறினாராம். இதனையடுத்து கிராமத்தைச் சேர்ந்த இருதய மேரி என்பவரின் மகள் கோகிலாவை அணுகியுள்ளனர். இருதய மேரி, இரண்டாம் தாரமாக பெண் தர மாட்டேன் என மறுத்து உள்ளார்.
“முதல் மனைவியோடு 15 நாட்கள் தான் வாழ்ந்தேன். அவர், இன்னொருவரோடு வாழ்வதால், அவரிடம் இருந்து விவகாரத்து வாங்கி விட்டேன். உங்கள் பெண், முதல் தாரம் மாதிரி தான்” எனப் பேசி இருதய மேரியை நம்ப வைத்துள்ளார் அஜித்குமார்.
இதனையடுத்து, கடந்த ஆண்டு வேளாங்கண்ணியில் கோகிலாவுக்கும், அஜித் குமாருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது தான் பிரச்சினை ஆரம்பமானது. “விவாகரத்து தீர்ப்பு நகல் கிடைக்கவில்லை. எனவே, திருமணத்தை ஃபோட்டோ, வீடியோ எடுக்க வேண்டாம். நகல் கிடைத்தவுடன், 3 மாதம் கழித்து பதிவுத் திருமணம் செய்து கொள்ளலாம்” எனக் கூறியுள்ளார் அஜித் குமார். ஆனால், உறவினர்கள் தங்களது செல்போனில் திருமண நிகழ்வுகளைப் படம் பிடித்துள்ளனர்.
திருமணமாகி 3 மாதங்கள் கடந்தும் பதிவுத் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது குறித்துக் கேட்ட கோகிலாவை, அஜித்குமாரும் அவரது தாயாரும் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. தற்போது கோகிலா அவரது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கோகிலாவுக்குப் பெண் குழந்தை பிறந்தது.
இதற்கிடையே, அஜித் குமார் தனது முதல் மனைவியிடம் சமரசம் பேசி, அவரைத் தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். இதையறிந்த கோகிலா மற்றும் அவரது உறவினர்கள் அஜித் குமாரிடம் நியாயம் கேட்டபோது, முதல் மனைவியுடன் தான் சேர்ந்து வாழ்வேன் என்றும், தொடர்ந்து தொல்லை அளித்தால் கொலை செய்து விடுவேன் என்றும் அதிகாரத் தோரணையில் கணவர் மிரட்டியதாக கோகிலா புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து கோகிலா அளித்த புகாரின் பேரில், வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் தலைமைக் காவலர் அஜித் குமார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago