நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி, விற்பனைக் குத் தடையில்லை என உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை பட்டாசு உற்பத்தியாளர் கள், தொழிலாளர்கள், விற்பனையாளர்கள் வரவேற்றனர். இதனால் இத்தொழிலை நம்பி யுள்ள 13 லட்சம் தொழிலாளர்களின் வாழ் வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இளங்கோவன், மாரியப்பன், சந்தியாகு
பட்டாசு உற்பத்தியில் நாட்டிலேயே சிறப்பிடம் பெற்றது சிவகாசி. வறட்சி, விவசாயம் இல்லாதது போன்ற காரணங்களால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுத் தொழி லில் அதிகமாக ஈடுபடுகின்றனர்.விருதுநகர் மாவட்டத்தில் உரிமம் பெற்ற 850-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்படுகின் றன.
இந்த ஆலைகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், சுமார் 8 லட்சத் துக்கும் அதிகமானோர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். நாட்டின் ஒட்டுமொத்த பட்டாசு தேவையில் 95 சதவீதத்தை, சிவகாசி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படும் பட்டாசு ஆலைகள் பூர்த்தி செய்கின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.6 ஆயிரம் கோடி வரை பட்டாசு வர்த்தகம் நடைபெறுகிறது.
புகை மாசு காரணமாக...
ஆனால், பட்டாசுக்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் கடந்த 2015-ல் அர்ஜுன் கோபால் மற்றும் பிறர் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதில், டெல்லி என்சிஆர் பகுதி யில் ஏற்பட்ட புகை மாசுக்கு பட்டாசு புகை தான் காரணம் எனக் குறிப்பிடப்பட்டது. அதையடுத்து, 11.11.2016 முதல் டெல்லியில் பட்டாசு விற்பனைக்கும், வெடிக்கவும் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
மேலும் பட்டாசு வெடிக்காமல் இருந்தால் டெல்லியில் தீபாவளியின்போது சுற்றுப்புற மாசு குறைகிறதா என ஆய்வு செய்யப் போவ தாக உச்ச நீதிமன்ற அமர்வின் மூத்த நீதிபதி ஏ.கே.சிக்ரி தனது ஆணையில் கூறியிருந்தார். தீபாவளி முடிந்த பிறகு அதாவது 1.11.2017-க் குப் பிறகு பட்டாசு விற்கலாம் எனவும் அந்த ஆணையில் நீதிபதி கூறியிருந்தார்.
இதனால், கடந்த ஆண்டு தீபாவளி யன்று டெல்லியில் பட்டாசு வெடிக்கப் படவில்லை. இருப்பினும் டெல்லியில் காற்று மாசின் அளவு அதிக மாகவே காணப்பட் டது. இருப்பினும், நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி, விற்பனை, பட்டாசு வெடிக்கத் தடை கோரி அதே மனு தாரர்கள் உச்ச நீதிமன் றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தனர். இவ்வழக்கில் நாடு முழுவதும் பட்டாசு தயாரிக்கவோ, வெடிக்கவோ தடை இல்லை என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தர விட்டது.
இத்தீர்ப்பால் நாடு முழுவதும் உள்ள பட்டாசு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், பட்டாசுத் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கச் செயலரும் அனைத்திந்திய பட்டாசு சங்கங்களின் கூட்டமைப்பு சம்மேளனத்தின் கூடுதல் பொதுச் செயலருமான மாரியப்பன் கூறும்போது, "உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. மாசு இல்லாத வகையில் பட்டாசு தயாரிக்க மத்திய அரசின் ஆராய்ச்சித் துறை ஆய்வு செய்து வருகிறது" என்றார்.
தமிழ்நாடு பட்டாசு வணிகர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் என்.இளங்கோவன் கூறும்போது, "உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் 13 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது" என்றார்.
பட்டாசுத் தொழிலாளி சந்தியாகு (56) கூறும்போது, "பட்டாசுத் தொழில் மட்டுமே எங்களது வாழ்வாதாரம். இதை நம்பித் தான் எங்களது குடும்பம் உள்ளது. தற்போது பட்டாசுத் தொழில் மட்டுமல்ல, என்னைப் போன்ற லட்சக்கணக்கான தொழி லாளர்களும் பிழைத்துவிட்டோம்" என்றார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கொண்டா டும் வகையில் பட்டாசு முகவர்கள் சங்க துணைத் தலைவர் ராஜேஷ் தலைமையில் முகவர்கள் சிவகாசி பஜார் பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங் கினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
49 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago