நாடு முழுவதும் வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதி கரித்து வருகிறது. கடந்த மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி, அரசு போக்குவரத்துத் துறை பதிவேடு களின்படி, தமிழகத்தில் மட்டும் மொத்தம் 2 கோடியே 56 லட்சத்து 61 ஆயிரத்து 847 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஓர் ஆண்டில் மொத்த வாக னங்களின் எண்ணிக்கை 10 முதல் 14 சதவீதம் அதிகரித்துள்ளது. அதற்கேற்ப வாகனப் புகையால் ஏற்படும் காற்று மாசும் அதிகரித்து வருகிறது.
இவ்வாறு காற்று மாசடைவதை தடுக்கும் நோக்கில், ‘மாசு கட்டுப் பாடு சான்று இல்லாத வாகனங் களின் காப்பீட்டை புதுப்பிக்கக் கூடாது’ என 2017 ஆகஸ்ட் 10-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட் டது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து காப்பீட்டு ஒழுங்குமுறை அமைப் பான ஐஆர்டிஏஐ, அனைத்து பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங் களுக்கும் கடந்த ஜூலை 6-ம் தேதி சுற்றறிக்கை அனுப்பியது. அதில், ‘வாகனம் வெளியிடும் புகையின் அளவு அரசு விதிமுறைப்படி கட்டுப் பாட்டில் உள்ளது என்பதை தெரியப் படுத்தும் சான்று இல்லாத வாகனங் களுக்கு காப்பீட்டை புதுப்பிக்கக் கூடாது’ என்று தெரிவிக்கப்பட் டிருந்தது.
சான்று இல்லை
உத்தரவு அமலாகி 2 மாதங் களுக்கு மேலாகியும் போதிய விளம்பரம் இல்லாததால் தமி ழகத்தில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் மாசு கட்டுப்பாடு சான்று இல்லாமல்தான் வாகனங்களை இயக்கி வருகின்றனர். அவ்வாறு இயங்கி வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கினால் இழப்பீடு கிடைக்குமா என்பது குறித்து பொதுத்துறை காப்பீட்டு நிறுவன அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, அவர் கூறியதாவது:
ஐஆர்டிஏ-வின் புதிய உத் தரவுப்படி எந்த ஒரு வாகனத் துக்கும் காப்பீடு பெற மாசு கட்டுப் பாடு சான்று அவசியம். ஆனால், காப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது 5 சதவீதம் பேரிடம்கூட மாசுக் கட்டுப்பாட்டு சான்று இருப்ப தில்லை.
எனினும், அவர்களுக்கு காப்பீடு மறுக்கக்கூடாது என்ப தால், ‘எனது வாகனத்துக்கு முறை யான மாசுக் கட்டுப்பாடு சான்று உள்ளது’ என்ற உறுமொழி படிவத் தில் கையெழுத்து பெற்றுவிட்டு காப்பீடு அளித்து வருகிறோம். அதன்பிறகு, வாகன உரிமை யாளர்கள் கண்டிப்பாக மாசு கட்டுப் பாடு சான்றை பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த சான்றை 6 மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.
நிச்சயம் இழப்பீடு கிடைக்காது
ஒருவேளை வாகனம் ஏதே னும் விபத்தில் சிக்கினால், வாகன சேதத்துக்கான இழப்பீடு கோரும் போது, மாசு கட்டுப்பாடு சான்று இல்லையெனில் அவர்களுக்கு நிச் சயம் இழப்பீடு அளிக்க முடியாது. அதே காப்பீடு செய்யப்பட்ட வாக னம் வேறு யார் மீதாவது மோதி னால், மாசுக் கட்டுப்பாடு சான்று இல்லையென்றாலும் பாதிக்கப் பட்ட நபர்களுக்கு இழப்பீடு வழங் குவது குறித்து மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயங்கள்தான் முடி வெடுக்க வேண்டும்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி அவர்கள் இழப்பீடு வழங்க உத்தரவிடுவார்களா என்பது கேள்விக்குறியே. எனவே, வாகன உரிமையாளர்கள் முறையான சான்றை வைத்துக்கொள்வது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.
போதிய விளம்பரம் இல்லை
மோட்டார் வாகன விபத்து தீர்ப் பாய வழக்கறிஞர் வி.எஸ்.சுரேஷ் கூறும்போது, “தமிழகத் தில் கோடிக்கணக்கான வாகனங் கள் இயங்குகின்றன. ஆனால், சுமார் 300 வாகன புகை பரி சோதனை மையங்கள் மட்டுமே உள்ளன. இந்த எண்ணிக்கை போதுமானதல்ல. மேலும், மாசு கட்டுப்பாடு சான்று கட்டாயம் என் பது குறித்து பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் மக்களிடம் முதலில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பின்னர், சிறிது கால அவகாசம் அளித்து உத்தரவை அமல்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாமல் மாசுக் கட்டுப்பாடு சான்றை காரணம் காட்டி இழப்பீடு மறுப்பதை ஏற்றுக்கொள்ள முடி யாது” என்றார்.
சான்று பெறுவது எப்படி?
போக்குவரத்து ஆணையர் சி.சமயமூர்த்தி கூறும்போது, “மாசு கட்டுப்பாடு சான்றை அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாகன புகை பரிசோதனை மையங்களில் வாகன ஓட்டிகள் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக தமிழகம் முழுவதும் 332 அங்கீகாரம் பெற்ற பரிசோதனை மையங்கள் உள்ளன. மேலும், பரி சோதனை மையங்கள் முறைப் படி இயங்குகின்றனவா என்பதை போக்குவரத்துத் துறை கண் காணித்து வருகிறது.
அந்தந்த வட்டாரப் போக்கு வரத்து அலுவலர்கள் அவ்வப் போது ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளித்து வருகின்றனர்” என்றார்.ஒருவேளை வாகனம் ஏதேனும் விபத்தில் சிக்கினால், வாகன சேதத்துக்கான இழப்பீடு கோரும்போது, மாசு கட்டுப்பாடு சான்று இல்லையெனில் அவர்களுக்கு நிச்சயம் இழப்பீடு அளிக்க முடியாது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago