கட்டிட விபத்து சிபிஐ விசாரணை கோரி மு.க. ஸ்டாலின் வழக்கு

மவுலிவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து 61 பேர் பலியானது தொடர்பான வழக்கின் புலன்விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கோரி திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பல விதிமுறைகளை மீறி இந்தக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கட்டிடத்தின் பூமி பூஜையில் அமைச்சர் ஒருவர் பங்கேற்றிருக்கிறார். உரிய அனுமதி கிடைப்பதற்கு முன்பே கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

விதிமுறைகளைத் தளர்த்தி கட்டுமான நிறுவனத்துக்குச் சாதகமாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், கட்டிட விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை என்பது அவசியமாகும் என்று தனது மனுவில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE