திருவள்ளூர் சுகாதார மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் அதிக எண்ணிக்கையில் பிரசவங்கள் பார்த்து, மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை புரிந்துள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக் கும் சுமார் 37 லட்சத்துக்கும் மேற் பட்ட மக்களில், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மருத்துவ தேவையைப் பூர்த்தி செய்வதில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர், பூந்தமல்லி ஆகிய 2 சுகாதார மாவட்டங்களில், திருவள்ளூர் சுகாதார மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அதிக எண்ணிக்கையில் பிரசவம் பார்த்து, மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை புரிந்துள்ளன.
இதுகுறித்து, திருவள்ளூர் சுகாதார மாவட்டத்தின், சுகாதாரத் துறை துணை இயக்குநர் மருத்துவர் கிருஷ்ணராஜ் தெரிவித்ததாவது:
திருவள்ளூர் சுகாதார மாவட்டத்தில் தற்போது 55 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின் றன. இதில், 3 ஆரம்ப சுகாதார நிலையங்கள் சமீபத்தில்தான் தொடங் கப்பட்டுள்ளதால், அவை தற்காலிகக் கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. ஆகவே, 52 ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் பிரசவங்கள் பார்க்கப்பட்டு வருகின்றன.
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களின் தன்னலமற்ற சேவையால் திறம்படப் பிரசவங்கள் பார்க்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், தமிழக அரசின் உதவித் தொகை, சத்தான உணவு, வாகன வசதி உள்ளிட்டவையும் பிரசவத்துக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு முறையாக வழங்கப்படுகின்றன. ஆகவே, திருவள்ளூர் சுகாதார மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங் களுக்கு பிரசவத்துக்காக வரும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால், தமிழகத்தில் 32 வருவாய் மாவட்டங்களின் கீழ் உள்ள 43 சுகாதார மாவட்டங்களில், திருவள்ளூர் சுகாதார மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அதிக எண்ணிக்கையில் பிரசவங்கள் பார்த்து, கடந்த ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் மாநில அளவில் 6-வது இடத்திலும், ஜூலை மாதம் 4-வது இடத்திலும் இருந்தன. கடந்த ஆகஸ்ட் மாதம் 643 பிரசவங்கள் பார்க்கப்பட்டுள்ளன. இதன் சராசரி 12. அதேபோல், கடந்த செப்டம்பர் மாதம் 658 பிரசவங்கள் பார்க்கப்பட்டுள்ளன. இதன் சராசரி 12.36.
ஆகவே, கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில், மாநில அளவில் திருவள்ளூர் சுகாதார மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதலிடம் பிடித்து, சாதனையைப் புரிந்துள்ளன. இந்தச் சாதனையைத் தொடர்ந்து தக்கவைக்க திருவள்ளூர் சுகாதார மாவட்டத்தின் சுகாதாரத் துறையினர் தங்களின் சேவையை தொடருவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago