தமிழகத்தில் போதிய அளவு நடைபாதை இல்லாததால் கடந்த ஆண்டில் 3,507 பாதசாரிகள் சாலை விபத்தில் இறப்பு: அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்குமா?

By கி.ஜெயப்பிரகாஷ்

தமிழகத்தில் போதிய அள வுக்கு நடைபாதைகள் இல்லாத தால், பாதசாரிகள் கடும் அவதிக் குள்ளாகின்றனர். கடந்த ஆண்டில் தமிழகத்தில் நடந்த சாலை விபத்துகளில் பாதசாரிகள் மட்டும் 3,507 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் மொத்த வாகனங் களின் எண்ணிக்கை 2 கோடியே 60 லட்சத்தைத் தாண்டியுள்ளது. ஆண்டுதோறும் 14 சதவீதம் வரை வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்ற வாறு சாலைகள் விரிவாக்கம், மேம் பாலம் அமைத்தல், புதிய சாலை கள் அமைத்தல் போன்ற பணிகள் நடக்கின்றன. ஆனால், சாலை களில் எந்த அளவுக்கு பாதசாரி களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வசதிகள் இருக்கிறது என்றால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

ஆக்கிரமிப்புகளால் தடைபாதை

பாதசாரிகளின் பாதுகாப்புக்கு, சாலை ஓரங்களில் நடைபாதை அமைப்பது என்பது நடைமுறை யில் ஒன்றாக இருக்கிறது. ஆனால், தமிழகத்தின் பெரும்பாலான நடை பாதைகள் தற்போது ஆக்கிரமிப்பு களால் தடைபாதைகளாகி விட்டன.

சில இடங்கள் வாகனங்கள் நிறுத்தமாகவும், பல இடங்கள் தரைக்கடை, பெட்டிக்கடைகளா கவும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதேபோல், சாலைகளில் பாதசாரி கள் பலமுனை கடந்து செல்லும் வகையில் குறுக்கு சாலைகளும் முழுமையாக இல்லாததால், அவர் கள் சாலை விபத்தில் சிக்கி இறக்கின்றனர்.

கடந்த ஆண்டு நடந்துள்ள சாலை விபத்துகள் தொடர்பாக புள்ளிவி வரத்தை மத்திய அரசு சமீபத் தில் வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஆண்டில் சராசரியாக ஒரு நாளைக்கு 56 பேர் சாலை விபத்து களில் பாதசாரிகள் இறந்துள்ளதாக வும், இந்தப் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முதலிடம்

தமிழகத்தில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்த பாத சாரிகளின் எண்ணிக்கை 3,507 ஆகும். 2-ம் இடத்தில் மகாராஷ் டிராவில் 1,831 பேரும், 3-ம் இடத் தில் ஆந்திராவில் ,1379 பேரும் இறந்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக போக்கு வரத்துத் துறை ஆணையர் சி.சமய மூர்த்தி கூறியதாவது:

தமிழ்நாட்டில் சாலை விபத்து களைக் குறைக்க தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வரும் ஆக்கப் பூர்வமான நடவடிக்கையால் 20 சதவீத இறப்புகள் குறைந்துள் ளன. மேலும், இறப்புகளைக் குறைக்க போக்குவரத்து காவல் துறையுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இதில், ஒரு பகுதியாக பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் முக்கிய சாலைகளில் நடுவில் இருக்கும் தடுப்புச் சுவர்களின் உயரத்தை அதிகப்படுத் துதல், சில சாலைகளில் இரும்புத் தடுப்புகள் அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டுள்ளோம்.

மேலும், மக்கள் அதிகமாகச் செல்லும் முக்கிய சாலைகளில் சுரங்கப்பாதைகள் அல்லது நடை மேம்பாலங்கள், நடைபாதைகள் அமைப்பதை அதிகரிக்க வேண்டு மெனக் கோரி சம்பந்தப்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகளிடமும் அதற்கான பட்டியலை வழங்கி யுள்ளோம்.

செல்போனில் பேசியவாறு...

இருப்பினும், செல்போனில் பேசியவாறு சாலையைக் கடத் தல், அனுமதிக்கப்படாத இடங் களில் திடீரென சாலையைக் கடந்து செல்லுதல் போன்ற நடவடிக்கை களை பாதசாரிகள் கைவிட வேண் டும். இதுதொடர்பாக சமூக ஊடகங்களிலும், பள்ளி, கல்லூரி களிலும், பொதுஇடங்களிலும் சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக சென்னை ஐஐடி உதவி பேராசிரியர் கீதகிருஷ் ணன் கூறும்போது, ‘‘சாலைகள் விரிவாக்கம், மேம்பாலம் கட்டும் பெரும்பாலான இடங்களில் போதிய அளவில் நடைபாதைகள் அமைப்பதில்லை. பாதசாரிகளும் சில இடங்களில் விதியை மீறி சாலைகளைக் கடக்க முயற்சிக் கின்றனர். இதனால், சாலை விபத்து களில் பாதசாரிகள் இறக்கின்றனர்.

மேலும், பிரதான சாலைகளின் அளவுக்கு ஏற்றவாறு குறைந்த பட்சமாக ஒன்றரை மீட்டரில் இருந்து அதிகபட்சமாக 7 மீட்டர் வரை யில் இருக்க வேண்டும். இதை முழு மையாக செயல்படுத்த சம்பந்தப் பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கிய சாலை களில் நடுவில் இருக்கும் தடுப்பு சுவர்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

இது வரவேற்க கூடிய ஒன்றா கும். ஆனால், ஒரு கிமீ தூரம் வரை யில் இடையே பாதசாரிகள் கடந்து செல்ல வசதிகள் இல்லாமல் இருக் கின்றன. எனவே, அண்ணாசாலை போன்ற முக்கிய சாலைகளில் 500 மீட்டருக்கு ஒரு இடத்தில் பாதசாரிகள் கடந்து செல்ல வசதி ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.

சிட்டிசன் கன்சியூமர் அண்டு சிவில் ஆக்ஷன் குரூப் (சிஏஜி) என்ற அமைப்பின் மூத்த ஆய்வா ளர் என்.சுகுணா கூறும்போது, ‘‘பேருந்து, காரில் செல்பவர் களுக்கு அவர்களைச் சுற்றி ஒரு பாதுகாப்போடு பயணம் செய்கின்ற னர். ஆனால், பாதசாரிகள் சாலை யில் செல்லும்போது இதுபோன்ற பாதுகாப்பு இல்லை.

வாகனங்களில் இருந்து இறங்கி எல்லோருமே சிறிது தூரமாவது நடக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே, பாதசாரிகளுக்கும் சாலை யில் தனி இடமாக நடைபாதைகள் ஒதுக்கி, வசதியை ஏற்படுத்த வேண் டும். பாதசாரிகளின் உரிமையைப் பாதுகாக்கும் வகையில் விபத்தை ஏற்படுத்துவோர் மீது கூடுதல் அபரா தம் வசூல் அல்லது சிறைதண்டனை அளித்தல், சாலைகளை முறையாக வடிவமைக்காத நிறுவனம், பரா மரிக்காத நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்வது உள்ளிட்டவற்றை முன்வைத்துள்ளோம்.

பாதசாரிகள், சைக்கிள் ஓட்டு வதை ஊக்குவிக்க சிறப்புத் திட்டங் களை வகுக்க நாங்கள் வலியுறுத்தி யுள்ளோம். சாலை விபத்துகளில் பாதசாரிகள் இறப்புகளைத் தவிர்க்க இதுபோன்ற ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகள் அவசிய மாக இருக்கின்றன’’ என்றார்.பாதசாரிகளின் உரிமையைப் பாதுகாக்கும் வகையில் விபத்தை ஏற்படுத்துவோர் மீது கூடுதல் அபரா தம் வசூல் அல்லது சிறைதண்டனை அளித்தல் உள்ளிட்டவை முன்வைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்