அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் சொகுசு, ஏ.சி. பேருந்து கள் என மொத்தம் 100 பேருந்துகள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளதால், பயணிகள் வருகை அதிகரித்துள் ளது. ஆயுதபூஜை விடுமுறையின் போது மட்டும் 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து, இப்பேருந்து களில் பயணம் செய்துள்ளனர்.
தமிழக அரசு விரைவு போக்கு வரத்துக் கழகம் மூலம் சென்னை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, திருப்பதி, பெங்களூரூ உள்ளிட்ட இடங்களுக்கு தினமும் சுமார் 1,080 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் தினமும் சராசரியாக 75 ஆயிரம் பேர் பயணம் செய் கின்றனர். கடந்த சில ஆண்டு களாக புதிய பேருந்துகள் வழங்கப் படாததால், பழைய பேருந்துகளே அதிகம் இருந்தன. இதனால், பொது மக்கள் அரசு விரைவு பேருந்து களை தவிர்த்து தனியார் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஏ.சி. வசதியுள்ள பேருந்துகள் - 40, கழிப்பறை வசதி கொண்ட பேருந்துகள் 10, சொகுசு பேருந்துகள் 50 என மொத்தம் 100 புதிய பேருந்துகள் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு சமீபத்தில் வழங்கப்பட்டன. இதனால், பயணிகளும் ஆம்னியில் இருந்து அரசுப் பேருந்துக்கு மாறத் தொடங்கியுள்ளனர். ஆயுதபூஜை விடுமுறையின்போது, அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் பயணிகள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்ததை காண முடிந்தது.
இதுகுறித்து பயணிகள் சிலர் கூறும்போது, ‘‘வழக்கமாக ஆம்னி பேருந்துகளில் பயணம் செய் வோம். சமீபத்தில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் புதிய பேருந்துகள் இணைக்கப்பட் டுள்ளதால், தற்போது இதில் பயணம் செய்கிறோம். கூட்டம் அதிகரித்தால், தனியார் ஆம்னி பேருந்துகளில் தங்கள் இஷ்டத் துக்கு கட்டணம் வசூலிப்பார்கள். வேறு வழியின்றி, அதிக கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டி இருந் தது. அரசு விரைவுப் பேருந்து களைப் பொருத்தவரை, எந்த சூழ லிலும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே வசூலிக்கப்படும். ஆம்னியைவிட இதில் கட்டணமும் குறைவு. தவிர, புதிய பேருந்துகள் என்பதால், பயணமும் சொகுசாக இருக்கிறது. இவற்றை நன்கு பராமரிப்பது அவ சியம். அதில் நிர்வாகம் மெத்தனம் காட்டக்கூடாது’’ என்றனர்.
மேலும் 350 பேருந்துகள்
போக்குவரத்துக் கழக அதிகாரி கள் கூறியதாவது:
பேருந்துக் கட்டண உயர்வுக்கு பிறகு அரசுப் பேருந்துகளில் பயணி கள் எண்ணிக்கை குறைந்தது. தற் போது, புதிய பேருந்துகள் வருகை யால் பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் கணிசமாக அதிகரித்துள் ளது. குறிப்பாக, அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 100 புதிய பேருந்துகள் இணைக்கப்பட் டுள்ளன. கட்டண உயர்வுக்கு பிறகு விரைவு பேருந்துகளில் 65 சதவீதமாக இருந்த பயணிகள் எண்ணிக்கை தற்போது 90 சதவீதமாக அதிகரித்துள்ளது.
விரைவு போக்குவரத்துக் கழகத் தில் சராசரி ஒருநாள் பயணி கள் எண்ணிக்கையும் 70 ஆயிரத் தில் இருந்து 75 ஆயிரமாக உயர்ந் துள்ளது. புதிய பேருந்துகளால் பயணிகளுக்கு நல்ல வசதி கிடைப்பதுடன், அரசுக்கு கூடுதல் வருவாயும் கிடைக்கிறது.
ஆயுதபூஜை விடுமுறை யின்போது மட்டுமே 50 ஆயிரம் பேர் விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர்.
அடுத்தகட்டமாக 350 புதிய பேருந்துகளை விரைவு போக்கு வரத்துக் கழகத்தில் இணைக்க திட்டமிட்டுள்ளோம். அதில் சொகுசு, ஏ.சி. பேருந்துகள் அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago