மக்களவைத் தேர்தலையொட்டி வாக்குச்சாவடி குழுக்கள் அமைக்கும் பணியை 80 சதவீதம் நிறைவு செய்துள்ள திமுக, கிராமங்கள், நகரங்களில் மக்களை சந்தித்து குறைகளை கேட்கும் பணியையும் தொடங்கியுள்ளது.
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலை எதிர் கொள்ள தேசிய, மாநில கட்சிகள் தயாராகி வருகின்றன. இதற்கான கூட்டணி பேச்சுவார்த்தைகளும் மறைமுகமாக தொடங்கிவிட்டன. தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி யான திமுக, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. தேர்த லுக்கு தயாராகும் வகையில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா 20 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மாவட்ட நிர்வாகிகளுக்கு ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார். அதன்படி, வாக்குசாவடிகளில் குழு அமைக் கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டி யுள்ளது. இதேபோல் கிராமங்கள், நகரங்களில் மக்களை சந்தித்து குறைகளை கேட்கும் பணியை திமுக தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக முன்னாள் மேயரும், தென்சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான மா.சுப்பிரமணியன் கூறியதாவது: மக்களவைத் தேர்தல் இன்னும் 7 மாதங்களில் நடக்கவுள்ளது. எனவே, கட்சி நிர்வாகிளை வாரந் தோறும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். வாக்காளர் பட்டியலில் பெயர் சரிபார்த்தல், விடுபட்ட பெயர்களை சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறோம். மக்களின் உள்ளூர் பிரச்சினைகளை முன்வைத்து தொடர்ந்து போராட்டங்களையும் நடத்தி வருகிறோம்.
தேர்தலுக்கு தயாராகும் வகை யில், ஒவ்வொரு வாக்குசாவடி யிலும் குழுக்கள் அமைக்க வேண் டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந் தார். அதன்படி, தமிழகம் முழு வதும் உள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் குழுக்கள் அமைக்கும் பணி 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. ஒவ்வொரு வாக்குசாவடியிலும் 15 முதல் 20 பேர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இதில் பெண் கள் 5 பேர், இளைஞர்கள் 5 பேர் உள்ளனர். இதுதவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 பொதுக்கூட் டங்கள் நடத்தப்பட்டு மத்திய, மாநில அரசுகளின் குறைகளை சுட்டிக்காட்டி தலைமை நிர்வாகிகள் பேசி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் குறைகேட்பு
தமிழகத்தில் சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களைக் கொண்ட கொங்கு மண்டலத்தில் கடந்த தேர்தலில் அதிமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது. திமுக வலுவான எதிர்க்கட்சியாக உருவானபோதிலும், ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணமாக கூறப் படுகிறது. எனவே, கொங்கு மண்டலத்தில் திமுக தனி கவனம் செலுத்தி தேர்தல் பணியைத் தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக முன்னாள் அமைச்சரும், ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான எஸ்.முத்துசாமி கூறியதாவது:
கொங்கு மண்டலத்தில் அந் தந்த மாவட்டச் செயலாளர்கள் தனி கவனம் செலுத்தி பல்வேறு கட்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். வாக்குச்சாவடிகளுக்கு குழு அமைக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பொது மக்களிடம் தற்போதுள்ள அரசியல் சூழல் குறித்து பொதுக்கூட்டங்கள் மூலம் எடுத்துக்கூறி வருகிறோம். கிராமம், நகரங்களில் ஒவ்வொரு வார்டிலும் மக்களை திமுக நிர் வாகிகள் நேரடியாக சந்திக்கும் பணியை சமீபத்தில் தொடங்கி யுள்ளோம். இதில், ஏராளமான மக்கள் அவர்களது குறைகளை தெரிவிக்கிறார்கள். அவர்களின் குறைகளை போக்க போராட் டங்களை நடத்தி எங்களால் முடிந்த அளவுக்கு தீர்த்து வைக்கிறோம். மத்திய, மாநில அரசுகளின் குறை களை சுட்டிக்காட்டி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
திமுக நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘அதிமுக உள்ளிட்ட சில கட்சிகளில் அதிருப்தியாக இருக்கும் நிர்வாகிகள், திமுகவில் சேர தொடர்ந்து ஆர்வம் தெரிவித்து வருகின்றனர். தற்போது, தேர்தல் அறிவிக்காத நிலையில் அவர்கள் அமைதியாக இருக்கின்றனர். தேர்தல் நெருங்கும்போது, வெளிப்படையாக வந்து திமுகவில் இணைவார்கள்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago