இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்கள் இருந்தால் அவரது பாதுகாப்பை அதிகரிக்கத் தயார் என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போதையை இலங்கையின் அதிபரான மைத்திரிபால சிறிசேனாவைக் கொல்ல சதி தொடர்பான வழக்கில் இந்திய பிரஜையான கேரளாவைச் சேர்ந்த தாமஸ் என்பவரை கடந்த செப்டம்பர் மாதம் இலங்கையின் குற்றப் புலனாய்வு காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இலங்கையின் குற்றப் புலனாய்வு காவல்துறையினரிடம் தாமஸ் அளித்துள்ள வாக்குமூலத்தில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, அவரது குடும்பத்தார், தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனா ஆகியோருக்கு ஆபத்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் இலங்கை அதிபர் சிறிசேனாவை கொலை செய்ய சதி நடப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து அவருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, '' முன்னாள் அதிபரின் இரண்டு இல்லங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளதால் சிறப்பு அதிரடிப் படையினரின் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு அச்சுறுத்தல்கள் அதிகரித்தால் அவருக்கு மேலும் பாதுகாப்பை அதிகரிக்கத் தயார்'' என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
54 secs ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago