தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் 5 ஆண்டு தேர்தலில் போட்டியிட முடியாது என்ற கருத்து வேகமாக பரவி வருகிறது. இது குறித்து சட்ட நிபுணர்களின் கருத்து என்ன?
டிடிவி தரப்பு எம்.எல்.ஏக்கள் 18 பேர் முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என ஆளுநரை சந்தித்து மனு அளித்ததை அடுத்து கொறடா புகாரின்பேரில் அவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து சட்டப்பேரவைத்தலைவர் தனபால் கடந்த ஆண்டு செப்.18 அன்று 18 பேரையும் தகுதி நீக்கம் செய்வதாக அறிவித்தார்.
இதை எதிர்த்து அவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடுக்க வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை நடந்தது. தீர்ப்பு கடந்த ஜூன் 14 அன்று வெளியானது. இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று இந்திரா பானர்ஜி தீர்ப்பளித்தார்.
அதே சமயம், சபாநாயகர் உத்தரவு செல்லாது, 18 எம்எல்ஏக்களையும், தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று மற்றொரு நீதிபதி சுந்தர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். இதனால் குழப்பம் ஏற்பட்டதை அடுத்து மூன்றாவது நீதிபதிக்கு விசாரணை மாற்றப்பட்டு முடிவு வெளியானது.
மூன்றாவது நீதிபதி சத்யநாராயணன் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் சட்டப்பேரவைத்தலைவர் தீர்ப்பு செல்லும் என தீர்ப்பளித்தார். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என சத்திய நாராயணன் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இதையடுத்து மேல் முறையீட்டுக்கு செல்வதா? தேர்தலை சந்திப்பதா? என்ற குழப்பத்தில் தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் இருக்க தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்று என்ற செய்தி பரவியது.
இது டிடிவி அணியினருக்குள்ளே குழப்பத்தை ஏற்படுத்தும் செயல் என செந்தில் பாலாஜி போன்றவர்கள் இதை கண்டித்தனர். இந்நிலையில் இந்த தகவல் உண்மையா என சட்ட நிபுணர் வழக்கறிஞர் ஜோதியை இந்து தமிழ் இணையதளம் சார்பில் கேட்டபோது அவர் அளித்த பதில்:
மேல்முறையீடு போகும் பட்சத்தில் உயர் நீதிமன்றத் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்படுமா?
நிறுத்தி வைக்கப்படாது. உச்சநீதிமன்றம் வழக்கை எடுத்துக்கொண்டாலும் வழக்கின் முடிவில் தான் முடிவு செய்வார்களே தவிர தடை உத்தரவு போட்டு எம்.எல்.ஏவாகத் தொடருங்கள் என்று சொல்ல மாட்டார்கள்.
மேல்முறையீட்டில் இடைக்கால உத்தரவு எதுவும் வராது. தகுதி நீக்கத்துக்கு முந்தைய பழைய நிலை வராது.
மேல்முறையீடு சென்றால் உயர் நீதிமன்ற தீர்ப்பு நிறுத்தப்படுமா ?
அனைத்தும் அல்ல. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் தேர்தல் நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவிக்கும். ஆகவே இடைத்தேர்தல் வராது. ஆகவே யாராவது ஒருவர் மேல்முறையீட்டிற்கு போகத்தான் செய்வார்.
ஆர்ட்டிகிள் 181-ன் கீழ் மேற்கண்ட 18 பேரும் இனி 5 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது என்பது சரியா?
தவறான ஒன்று. அந்தத் தகுதி நீக்கத்தின்கீழ் இந்த தகுதி நீக்கம் வராது. ஆர்ட்டிக்கல் 181 கீழ் தகுதி நீக்கம் என்பது தண்டைக்குள்ளானவர்கள் சம்பந்தப்பட்டது. இவர்கள் 10-வது ஷெட்யூலின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள். அதுவும் இதுவும் ஒன்றல்ல.
ஆர்ட்டிகிள் 181-ன் கீழ் தகுதி நீக்கம் என்பது தண்டனைக்குரிய சட்டத்தின் கீழ் வழக்கு நடந்து தண்டனை பெற்று அதன் மூலம் தகுதி நீக்கம் செய்யப்படுபவர்களைக் குறிக்கும். மேலும் 5 ஆண்டல்ல 6 ஆண்டுகள் போட்டியிட முடியாது, 6 வருட தகுதி நீக்கம் என்பது லஞ்ச வழக்கு, சொத்துகுவிப்பு வழக்கு, வரதட்சணை வழக்கு உள்ளிட்ட ஏழெட்டு வழக்குகள் உள்ளன. தேர்தல் விதிமீறல் தகுதி நீக்கத்தின் கீழ் வருபவர்களும் 181-ன் கீழ் வருவார்கள்.
ஆனால் 18 எம்.எல்.ஏக்கள் சபாநாயகரால் ஷெட்யூல் 10-ன் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள். அவர்கள் இந்த பிரிவின்கீழ் வர மாட்டார்கள். அவர்களுக்கு தடை எதுவும் இல்லை.
இவ்வாறு சட்ட நிபுணர் ஜோதி பதிலளித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
23 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago