இந்து கடவுள்கள் குறித்து விமர்சனம் செய்ததாக கிறிஸ்தவ மதபோதகர் லாசரஸ் மீது வழக்கு

By த.சத்தியசீலன்

இந்து கடவுள்கள் குறித்து விமர்சனம் செய்ததாக கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி.லாசரஸ் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட நாசரேத் அருகேயுள்ள நாலுமாவடியைச் சேர்ந்தவர் மோகன் சி.லாசரஸ். கிறிஸ்தவ மதபோதகரான இவர் இந்து கடவுள்கள் குறித்து விமர்சனம் செய்து பிரசங்கம் செய்த விவகாரம்  சமூக வலைதளங்களில் பரவியது. மேலும் ஜெபக்கூட்டங்களில் இந்து மதம் குறித்து விமர்சனம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து பாஜக பிரமுகர் முருகேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் கருமத்தம்பட்டி, சூலூர் ஆகிய காவல் நிலையங்களிலும், விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகி மனோ சங்கர் என்பவர் அளித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி காவல் நிலையத்திலும் மோகன் சி லாசரஸ் மீது  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

153 ஏ-இரு மதங்கள் இடையே விரோத உணர்ச்சியைத் தூண்டுதல், 295-ஏ மதம் தொடர்பான குற்றங்களைப் புரிதல் ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார் கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி.லாசரஸைக் கைது செய்ய, அவரது சொந்த ஊருக்கு விரைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்