ஏற்றுமதியாளர்கள் வௌிநாடு களுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களை அனுப்ப வசதியாக ரூ.2 கோடி செலவில் சர்வதேச வர்த்தக மையத்தை சென்னையில் அஞ்சல் துறை அமைக்கவுள்ளது. சுங்கத்துறையுடன் இணைந்து இம்மையம் செயல்பட உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல் துறை தலைவர் எம்.சம்பத் கூறியதாவது:
இந்திய அஞ்சல் துறை சார் பில், வெளிநாடுகளுக்கு கடிதம், பார்சல் அனுப்பும் முறை பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங் கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2016-ம் ஆண் டுக்கு முன்பு வரை, வணிக ஏற்றுமதி பொருட்களை அஞ்சல் துறை மூலமாக வௌிநாடுகளுக்கு அனுப்ப அனுமதி வழங்கப்பட வில்லை. பின்னர், வௌிநாட்டு வர்த்தகக் கொள்கையில் திருத் தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் படி, இந்திய வியாபார ஏற்றுமதி திட்டத்தின் கீழ், அஞ்சல்துறை மூலம் ‘இ-காமர்ஸ்’ ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதில், ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் தங்கள் ஏற்று மதி பொருட்களை அஞ்சல்துறை மூலம் வௌிநாடுகளுக்கு அனுப்ப அனுமதி வழங்கப்பட்டது. எனி னும், அப்போது கூட ஏற்றுமதி யாளர்கள் ஒரே நேரத்தில் அதிக அளவு பொருட்களை அஞ்சல்துறை மூலம் வௌிநாடு களுக்கு அனுப்ப முடியாது. மாதிரிப் (சாம்பிள்) பொருட்களை மட்டுமே அனுப்ப அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஜூன் 4-ம் தேதி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில், ஏற்றுமதியாளர்கள் வௌிநாடுகளுக்கு வணிக நோக் கில் ஏற்றுமதி செய்யும் பொருட் களை மொத்தமாக அஞ்சல் துறை மூலமாக அனுப்ப அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக, ரூ.2.1 கோடி செலவில், செயின்ட் தாமஸ் மவுன்ட் தலைமை அஞ்சலகத்தில் சர்வதேச வர்த்தக மையம் ஏற் படுத்தப்பட உள்ளது.
இதில், சுங்கத்துறையின் உதவி மையம் அமைக்கப்படுவதால், இறக்குமதி, ஏற்றுமதி குறியீட்டு எண் (ஐஇசி) பெற்றுள்ள ஏற்று மதியாளர்களுக்கு பார்சல்களை எளிதாக பதிவு செய்தல் உள் ளிட்ட வசதிகள் கிடைக்கும். அத்து டன், மதிப்புக் கூட்டு சேவையாக ஏற்றுமதி செய்யப்படும் பொருட் களை பாதுகாப்பாக கொண்டு செல்வதற்காக அவற்றை நேர்த்தி யாக பேக்கிங் செய்து தரப்படும்.
இந்திய வியாபார ஏற்றுமதி திட்டத்தின் கீழ், ஏற்றுமதியாளர் கள் கைவினைப் பொருட்கள், ஜவுளிப் பொருட்கள், புத்தகங் கள், தோல் காலணிப் பொருட் கள், பொம்மைகள், பேஷன் ஆடைகள், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆகிய வற்றை ஏற்றுமதி செய்யப் படும் நாடுகளை பொறுத்து ஏற்று மதி மதிப்பில் 2 முதல் 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago