தற்போது யாருடனும் கூட்டணி கிடையாது: மதுரையில் முதல்வர் பழனிசாமி தகவல்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

“தற்போது வரை யாருடனும் நாங் கள் கூட்டணி கிடையாது. மக்கள வைத் தேர்தல் அறிவித்த பிறகு கூட் டணி குறித்து பார்க்கலாம்” என்று தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனி சாமி தெரிவித்தார்.

மதுரை புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் செயல்வீரர்கள் ஆலோச னைக் கூட்டம் மதுரை ரிங் ரோட் டில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. புறநகர் மாவட் டச் செயலாளர் விவி.ராஜன்செல் லப்பா தலைமை வகித்தார். அமைச் சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி. உதயகுமார் முன்னிலை வகித்தனர். முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகி யோர் கலந்துகொண்டு திருப்பரங் குன்றம் தொகுதி பொறுப்பாளர் களாக நியமிக்கப்பட்டுள்ள 15 அமைச்சர்கள் மற்றும் நிர்வாகி களுடன் ஆலோசனை நடத்தினர்.

கூட்டம் முடிந்ததும், முதல்வர் கே.பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கூட்டாகச் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: திருப்பரங்குன்றம் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம். எம்ஜிஆர் மற் றும் ஜெயலலிதா காலத்தில் 8 முறை அதிமுக இத்தொகுதியில் வென் றுள்ளது. அதிமுக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் தொகுதி மக்க ளைச் சென்றடைந்துள்ளன.

நிர்வாகிகள், தொண்டர்கள் எப் போது தேர்தல் வந்தாலும் அதைச் சந்திக்க ஆர்வமாகவும், எழுச்சியு டனும் உள்ளனர். மதுரையைப் பொருத்தவரை அதிமுகவுக்கு மிக வும் ராசியான மாவட்டம். ஆகை யால் இங்கிருந்து எங்கள் வேலை யைத் தொடங்குகிறோம்.

திமுகவினர் இடைத்தேர்தலைச் சந்திக்க முடியாமல் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை அரசியலாக்கி மக்களை திசை திருப்பப் பார்க்கி றார்கள். ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை மதுரைக்குத்தான் வரும். விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும். பிரதமரையும் அதற்காக வலியுறுத் துவோம். இதில், எந்த மாற்றமும் இல்லை. தேர்தல் தேதி அறிவித்த தும் வேட்பாளரை பற்றி முடிவு செய்வோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதன்பின் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு முதல்வர் அளித்த பதில்: கருணாஸ் எம்எல்ஏ கூவத் தூர் பற்றிய ரகசியத்தை முதலில் சொல்லட்டும், அதன்பிறகு பதில் சொல்கிறேன். மக்களவை தேர்தல் 39 தொகுதிகளையும் கைப்பற்று வோம் என கூறினேன். தற்போது வரை யாருடனும் நாங்கள் கூட்டணி கிடையாது. தேர்தல் அறிவித்த பிறகு பார்க்கலாம்.

கருணாஸ் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக சொல்கிறார். ஆளும்கட்சி சார்பில் போட்டியிட்டு எங்களுடைய இரட்டை இலை சின்னத்தில் வெற்றிபெற்றுள்ளார். அவர் எப்படி சபாநாயகருக்கு எதி ராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியும். அதற்கு சட் டம் என்ன சொல்கிறது என்பது எங்களைவிட பத்திரிகையாளர்க ளாகிய உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

ஆர்.கே.நகர் தேர்தலில் தினக ரன் எப்படி வெற்றிபெற்றார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆர்.கே.நகர் பார்முலா இங்கே எடுப டாது. திருப்பரங்குன்றம் மக்கள் விவேகமான மக்கள். சிந்தித்து வாக்களிக்கக் கூடியவர்கள். அதி முக மீது இந்த தொகுதி மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் தொகுதிக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை திருவாரூருக்கு அதிமுக கொடுப்ப தில்லை என்பது தவறான தகவல். வரும் 7-ம் தேதி இதேபோல் திருவா ரூரில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்படுகிறது.

உள்ளாட்சித் தேர்தலை நடத்த நாங்கள் முயற்சி செய்தபோது, திமுகவினர்தான் நீதிமன்றத்துக்குச் சென்றார்கள். அந்த வழக்கு முடிந்த பிறகு உள்ளாட்சித் தேர்தலை நடத்துவோம். கூட்டுறவு சங்கத் தேர்தலில் 93 சதவீதம் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. அதனால், எந்தத் தேர்தல் வந்தாலும் அதைச் சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. ஜனநாயக நாட்டில் யாரும் எத்த கைய கருத்துகளையும் சொல்ல லாம். நடிகர் விஜய் கட்சியே ஆரம் பிக்கவில்லை. அவர் கட்சி ஆரம் பித்த பிறகு பார்த்துக் கொள்ளலாம். பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து 3 முறை தலைமைச் செயல கத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்திருக்கிறோம். அதிகாரி களின் ஆலோசனைகளைப் பெற்று அதற்குரிய முன்னேற்பாடுகளை அரசு செய்து வருகிறது. இயற்கை யின் சீற்றம் குறித்து நாம் அறிவ தற்கு இயலாது. ஆனால், முன்னெச் சரிக்கை செயல்பாடுகளின் மூலம் அதனால் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்க முடியும் என்றார்.

கூட்டத்தில், முதல்வர் பழனி சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் கட்சி நிர்வாகிகளிடம், ‘‘இந்த இடைத்தேர்தல் வெற்றி என்பது நமக்கு கட்டாயம். வெற்றிபெற்றால் மட்டுமே நமது ஆட்சிக்கும், கட்சிக்கும் எதிர்காலம். மத்திய அரசும் நம்மை கவுரவமாக நடத்தும்’’ என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்