தீபாவளி பண்டிகையை முன் னிட்டு நெரிசலை பயன்படுத்தி திருடுபவர்களை பிடிக்க தியாக ராயநகரில் கண்காணிப்பது போல் சிறிய வகை விமானம் மூலம் சென்னையில் மேலும் 7 இடங்களில் போலீஸார் கண்காணிக்க உள்ளனர்.
தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 6-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு பொது மக்கள் தற்போது புத்தாடை, வீட்டு உபயோக பொருட்கள், அலங்கார பொருட்கள், பரிசு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை வாங்க கடை வீதிகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.
இந்த நெரிசலை பயன்படுத்தி திருட்டு, வழிப்பறி, கொள்ளை, கவனத்தை திசைதிருப்பி நூதன முறையில் நகை அபேஸ் உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ளன. இதை முற்றிலும் தடுத்து நிறுத்த சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப் படுத்தப்பட்டுள்ளன.
முதல் கட்டமாக திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற நிகழ்வு களை தடுக்க தியாகராயநகரில் கண்காணிப்பு கேமரா பொருத் தப்பட்ட ‘ட்ரோன்’ எனப்படும் சிறிய வகை குட்டி விமானத்தை வானில் பறக்கவிட்டு போலீஸார் வான்வெளி கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து மக்கள் அதிகளவில் கூடும் புரசை வாக்கம், வேளச்சேரி, தாம்பரம், வண்ணாரப்பேட்டை, பாரிமுனை, பூக்கடை, கோயம்பேடு ஆகிய மேலும் 7 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட ட்ரோன் எனப்படும் குட்டி விமானத்தை வானில் பறக்க வட்டு கண்காணிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதில், உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்த வாறு போலீஸார் கண்காணிக்க முடியும்.
இதுபோக சென்னையில் பூக் கடை, வண்ணாரப்பேட்டை, மாதவரம், கீழ்பாக்கம், திருவல்லிக் கேணி, மயிலாப்பூர், அடையார், தியாகராயநகர், பரங்கிமலை, அண்ணாநகர், புளியந்தோப்பு, அம்பத்தூர் ஆகிய 12 காவல் மாவட்டங்களில் உள்ள 45,600 கண் காணிப்பு கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும், ரோந்து போலீஸார் தங்களது உடலில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட அதி நவீன உபகரணங்கள் அடங்கிய ஜாக்கெட் அணிந்து கொண்டு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோக ஆங்காங்கே பழைய திருடர்களின் புகைப்படங்கள் முக்கிய வீதிகளில் வைக்கப்பட் டுள்ளன. இவர்களில் யாரேனும் சென்னைக்குள் நுழைந்தால் அவர் களை ‘பேஸ் டிடெக்டர்’ தொழில் நுட்பம் மூலம் கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையையும் போலீ ஸார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
தீபாவளி பண்டிகையை சீர் குலைக்கும் வகையில் யாரேனும் சென்னைக்குள் ஊடுருவி உள் ளார்களா என்பதை கண்காணிக்கும் வகையில் சென்னையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள், மேன்சன்களில் சென்னையில் உள்ள 135 காவல் நிலைய போலீஸாரும் ஒரே நேரத்தில் நள்ளிரவில் திடீர் சோதனை நடத்தி உள்ளனர். இந்த சோதனையின்போது சந்தே கத்தின்பேரில் பிடிபட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறும்போது, “பாதுகாப்பான மற்றும் குற்றச்செயல்களற்ற தீபாவளி பண்டிகையை மக்கள் கொண்டாட அனைத்து வகையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட் டுள்ளன” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago