உதகைக்கு சுற்றுலா வந்த போது பரிதாபம்: கார் விபத்தில் 5 பேர் பலி; 3 நாட்களுக்குப் பின்னர் இருவர் உயிருடன் மீட்பு

By ஆர்.டி.சிவசங்கர்

உதகைக்குச் சுற்றுலா வந்த சென்னையைச் சேர்ந்த 5 பேர் கல்லட்டி மலைப்பாதையில் கார் விபத்துக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்தனர். இருவர் அதிர்ஷ்டவசமாக மூன்று நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

சென்னையைச் சேர்ந்த  ராமா ராஜேஷ், ரவிவர்மா, இப்ராஹீம், ஜெயகுமார், அருண், அமர்நாத், ஜூட் ஆகிய 7 பேர் கடந்த 30-ம் தேதி உதகைக்குச் சுற்றுலா வந்துள்ளனர். உதகை ஃபர்ன்ஹில் ஸ்டெர்லிங் ரிசார்ட்ஸ் ஹோட்டலில் தங்கிய இவர்கள் கடந்த 1-ம் தேதி காலை முதுமலை புலிகள் காப்பகத்துக்கு செல்வதாகக் கூறி தங்கள் காரில் சென்றுள்ளனர்.

மாயம்?

ஆனால், அன்று அவர்கள் மீண்டும் உதகை திரும்பவில்லை. இந்நிலையில், ஹோட்டல் அறையைக் காலி செய்ய வேண்டிய நிலையில், 7 பேரும் ஹோட்டலுக்கு திரும்பாததால் சந்தேகமடைந்த ஹோட்டல் மேலாளர் சிவகுமார் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். வழி தெரியாமல் வனப்பகுதியினுள் எங்காவது சென்று அவர்கள் சிக்கிக்கொண்டிருப்பார்கள் எனக் கருதிய போலீஸார், அவர்களின் மொபைல் போன்களை தொடர்புகொண்டனர். ஆனால், அவர்களின் செல்போன்கள் ஸ்விட்ச் ஆஃப் நிலையில் இருந்தது.

இதனால், அவர்கள் கடைசியாக பேசிய செல்போன் கோபுரங்களை போலீஸார் ஆய்வு செய்த போது, உதகை அருகே உல்லத்தி செல்போன் கோபுரத்தில் செல்போன் தொடர்பு கண்டறியப்பட்டது. இதனால், வனப்பகுதிக்கு வழி தவறிச் சென்று இருக்கக்கூடும் என போலீஸார் எண்ணினர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெ.சண்முகப்ரியா உத்தரவின் பேரில் மசினக்குடி காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன், வனச்சரகர் மாரியப்பன் தலைமையில் போலீஸார் மற்றும் காவல்துறையினர் மசினக்குடி ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

உயிரிழப்பு:

இந்நிலையில், உதகையிலிருந்து மசினக்குடி செல்லும் கல்லட்டி மலைப்பாதையில் 35-வது கொண்டை ஊசி வளைவு அருகே 200 அடி பள்ளத்தில் கார் உருண்டு விபத்துக்குள்ளானது தெரியவந்தது.

கார் விபத்து ஏற்பட்டு மூன்று நாட்களான நிலையில், அதில் பயணம் செய்த 7 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்பட்டது.

காரை மீட்கும் பணியின் போது 7 பேரில் 5 பேர் உயிரிழந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது. இருவர் உயிரோடு இருப்பது தெரியவந்தது. அவர்களை மீட்ட போலீஸார் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். விபத்து நடந்து மூன்று நாட்களான நிலையில், அடர்ந்து வனப்பகுதியில் இருவர் அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்