பிப்ரவரியில் லோக் ஆயுக்தா அமைக்கப்படும்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

By ஆர்.பாலசரவணக்குமார்

 

தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா சட்ட மசோதா கடந்த ஜூலையில் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை 2 மாதங்களுக்குள் அமைக்க உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே காலஅவகாசம் வழங்கி இருந்தது.இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் நேற்று நடந்தது.

அப்போது தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டு விட்டதா,அதன் தலைவர் யார் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழக அரசு தரப்பில் இன்னும் லோக் ஆயுக்தா அமைக்கப்படவில்லை என பதிலளிக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த நீதிபதிகள், ‘‘தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமைக்க ஏற்கெனவே 2 மாதம் அவகாசம் வழங்கியும் ஏன் இன்னும் அமைக்கவில்லை? உங்களுக்கு லோக் ஆயுக்தா அமைக்க விருப்பமில்லையா? இதுதொடர்பாக பிற்பகலுக்குள் பதிலளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தனர்.

அதன்படி, இந்த வழக்கு பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமைக்க 3 மாதம் அவகாசம் வேண்டும் எனவும், அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டு விடும் எனவும் தமிழக அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. அதையேற்ற நீதிபதிகள், தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்க மீண்டும் 3 மாதம் அவகாசம் வழங்கி விசாரணையை தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்