தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் விநாடிக்கு 2 லட்சம் கனஅடி என்ற அளவுக்கு நீர்வரத்து உயர்ந்ததால் 13 ஆண்டுகளுக்குப் பிறகு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கேரள, கர்நாடக மாநிலப் பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் கனமழையின் காரணமாக கர்நாடக மாநிலம் கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. எனவே, கடந்த 2 தினங்களாகவே கர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்தை நோக்கி காவிரியாற்றில் திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை மாலை விநாடிக்கு 1 லட்சத்து 90 ஆயிரம் கனஅடி என்ற அளவுக்கு உயர்ந்தது. இந்த அளவு படிப்படியாக உயர்ந்து வியாழக்கிழமை காலையில் விநாடிக்கு 2 லட்சம் கனஅடி என்ற அளவைக் கடந்தது. இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றின் மேடும், பள்ளமுமான பகுதிகள் அனைத்தும் நீரால் நிறைக்கப்பட்டு இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.
ஆர்ப்பரித்து ஓடும் வெள்ளத்தின் வேகத்தால் அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புள்ளதால் ஒகேனக்கலில் காவிரியாற்றை ஒட்டிய பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்லாதபடி அரசு அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒகேனக்கலில் கூட்டுக் குடிநீர் திட்ட நீரேற்று நிலையத்துக்கு அருகில் ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள சில வீடுகளை தழுவியபடி தண்ணீர் ஓடுகிறது. சில இடங்களில் வீடுகளை ஒட்டிய சந்துகளில் தண்ணீர் நுழைந்துள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று காலை முதலே 20 குடும்பங்களைச் சேர்ந்த மக்களை அரசு அதிகாரிகள் வீட்டிலிருந்து வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
2005-ம் ஆண்டுக்குப் பின்னர் ஒகேனக்கலில் தற்போது தான் நீர்வரத்து விநாடிக்கு 2 லட்சம் கனஅடி என்ற அளவைக் கடந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago