பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் தமிழகம், புதுவையில் 22 லட்சம் பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு விநியோகம்: முதல் 10 மாநிலங்களின் பட்டியலில் தமிழகமும் இடம் பிடித்தது

By ப.முரளிதரன்

பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின், கடந்த 3 ஆண்டுகளில் தமிழகம் மற்றும் புதுவையில் 22.32 லட்சம் பயனாளிகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இத்திட்டத்தை சிறப்பாக செயல் படுத்தி வரும் முதல் 10 மாநிலங் களின் பட்டியலில் தமிழகமும் இடம் பிடித்துள்ளது.

உலக சுகாதார மையத்தின் ஆய்வு தகவலின்படி, வீட்டின் உள்ளே ஏற்படும் காற்று மாசால் வருடத்துக்கு 13 லட்சம் பேர் நோய் வாய்ப்பட்டு உயிரிழக்கிறார்கள் என தெரிவித்துள்ளது. இந்தியா வில் கிராமப்பகுதிகளில் உள்ள வீடுகளில் மாசு குறைந்து சுகா தாரம் மேம்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டதே பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016, மே 1-ம் தேதி இத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

பெண் பயனாளிகளுக்கு மட் டுமே இத்திட்டத்தின் கீழ், இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்படும். மேலும், சம்பந்தப்பட்ட பயனாளி யின் வீட்டில் குடும்ப உறுப்பினர் களின் பெயரில் எரிவாயு இணைப்பு இருக்கக் கூடாது. அத்துடன், 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, பயனாளிகள் வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்க வேண்டும். பயனாளிகள் ஆதார் அட்டை மற்றும் வங்கி சேமிப்புக் கணக்கு வைத்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு இணைப்புக்கும் வைப்புத் தொகை உள்ளிட்டவற் றுக்கு ரூ.1,600 மானியத் தொகை யாக மத்திய அரசு சம்பந்தப்பட்ட எரிவாயு விநியோகஸ்தருக்கு வழங்கி விடும். மேலும், எரிவாயு அடுப்பு, சிலிண்டர் ஆகிய வற்றுக்கானத் தொகையை பயனா ளிகளுக்கு எரிவாயு விநியோகஸ் தர்கள் வழங்க வேண்டும். இந்தக் கடனை மறுமுறை எரிவாயு சிலிண் டரை வாங்கும்போது அதற்குக் கிடைக்கும் மானியத் தொகையில் இருந்து விநியோகஸ்தர்கள் கழித்துக்கொள்ள வேண்டும்.

இதுகுறித்து, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பொதுமேலாளர் (கார்ப்பரேட் கம்யூனிகேஷன்) சபீதா நட்ராஜ் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:

‘‘கிராமப் பகுதிகளில் வறுமைக் கோட்டுக்கு கீழே வசிக்கும் ஏழை பெண்கள் வீடுகளில் சமையல் செய்ய அடுப்புகளில் விறகு, மாட்டு சாணம் விராட்டியை பயன் படுத்துவதற்கு முற்றுப்புள்ளி வைத்து அவர்கள் பயனடையும் வகையில், இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. எல்பிஜி மாசு ஏற்படுத்தாத சுத்தமான எரிவாயு. எனவே இதன்மூலம் வீடுகளில் மாசு ஏற்படுவது தடுக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ், வரும் 2020-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 4 கோடி இலவச இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட் டது. கடந்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் 3.36 கோடி இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப் பட்டுள்ளன. இதையடுத்து, இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் எண்ணிக்கையை 4 கோடியில் இருந்து 8 கோடியாக அதிகரித்து இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுவை யில் இதுவரை 22 லட்சத்து 32,451 இணைப்புகள் வழங்கப்பட்டுள் ளன. மேலும், 80 ஆயிரம் பேருக்கு புதிய இணைப்புகள் வழங்கப் பட உள்ளன. இதன்மூலம், இத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் முதல் 10 மாநிலங்களின் பட்டியலில் தமிழகமும் இடம் பிடித் துள்ளது.

மேலும், எரிவாயு இணைப்பு வழங்குவது மட்டுமின்றி அவற்றைப் பாதுகாப்பகாக பயன்படுத்துவது குறித்து கிராமப்புற பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக அவர்களுக்கு பாதுகாப்பு வழிகாட்டி அட்டை வழங்கப்படுகிறது. அத்துடன், எரிவாயு அடுப்பை பயன்படுத்தும் போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அவர்களுக்கு உதவும் வகையில் ரூ..2.5 லட்சத்துக்கான விபத்துக் காப்பீடும் வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்