வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பாக வேகமெடுக்கும் கூவம் நதி சீரமைப்புப் பணிகள்: ஆற்றில் விடும் கழிவுநீரை சுத்திகரிக்கவும் திட்டம்

By டி.செல்வகுமார்

வடகிழக்கு பருவமழைக் காலத் துக்கு முன்பாக கூவம் நதி சீரமைப்புப் பணிகள் வேகமெடுக்கின்றன.

2015 டிசம்பரில் கனமழை பெய்து சென்னை மாநகரே வெள்ளத்தில் மிதந்தது. இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றி கூவம் மற்றும் அடையாற்றில் தூய்மைப் படுத்தும் பணியை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்தது.

அதன்படி சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் ஒருங்கிணைந்த கூவம் நதி சுற்றுச்சூழல் சீரமைப்புத் திட்டம்

உருவாக்கப்பட்டது. தமிழக பொதுப்பணித் துறை, சென்னை மாநகராட்சி, உள்ளாட்சித் துறை, சென்னைக் குடிநீர் வாரியம், தமிழ் நாடு குடிசை மாற்று வாரியம் ஆகிய துறைகளிடம் பல்வேறு பணிகள் ஒதுக்கப்பட்டன. இத்திட்டத்துக்கு ரூ.422 கோடி ஒதுக்கப்பட்டுள் ளது.

ஆக்கிரமிப்பை அகற்றுதல், ஆற்றை தூர்வாரி ஆழப்படுத்தி, அகலப்படுத்துதல், கரைகளை பலப்படுத்துதல், ஆறுகளில் திடக் கழிவுகளை அகற்றி, இருகரை களிலும் வேலி அமைத்தல், ஆற்றினை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்காக அதன் எல்லைகளை வரையறுத்து, எல்லைக் கற்கள் நடப்படுகின்றன. ஆற்றில் வெளியேற்றப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பது உள்ளிட்ட பணிகளை ‘சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை’ கண் காணித்து வருகிறது.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது: கூவம் ஆறு, திருவள்ளூர் மாவட் டத்தில் கூவம் என்ற குளத்தில் இருந்து உற்பத்தியாகி 65 கி.மீ ஓடி மெரினாவில் நேப்பியர் பாலம் அருகே வங்கக் கடலில் கலக்கிறது. சென்னையில் மட்டும் 20 கி.மீ் தூரத்துக்கு கூவம் ஆறு ஓடுகின்றது.

கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகில் இருந்து நேப்பியர் பாலம் வரை ஓராண்டுக்கு மேலாக ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறோம். மொத்தமுள்ள 26,837 குடும்பங்களில் இதுவரை 12,813 குடும்பங்களை அப்புறப்படுத்தி புறநகர் பகுதிகளில் குடியமர்த்தி யுள்ளோம். புதுப்பேட்டை மற்றும் சிந்தாதிரிப்பேட்டையில் ஆக்கிரமித்து கட்டியுள்ள 383 கடைகளில் 273 கடைகள் அப்புறப் படுத்தப்பட்டுள்ளன. இவர்களுக்கு சிங்கப்பெருமாள்கோவில் அருகே மாற்று இடம் தரப்படுகிறது.

சிந்தாதிரிப்பேட்டையில் 4 கோயில்களும் 3 கிறிஸ்துவ ஆலயங்களும் அகற்றப்பட்டிருக்கின்றன. மொத்தத்தில் மழைநீர் தங்கு தடையின்றி கடலுக்குச் செல்வதற்கான ஏற்பாடு களை வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக செய்து முடிக்கப்படும்.

திருவள்ளூர் மாவட்டம், ஆத னூர் குளத்தில் இருந்து உற்பத்தி யாகும் அடையாறு 42 கி.மீ ஓடி வங்கக் கடலில் கலக்கிறது. 12 கி.மீ தூரம் சென்னையில் ஓடு கிறது. நந்தம்பாக்கம் முதல் அடை யாறு முகத்துவாரம் வரையி லான அடையாறில் ஆக்கிர மித்து கட்டப்பட்டுள்ள 12 ஆயிரம் வீடுகளில் இது வரை 6 ஆயிரம் வீடுகள் அப்புறப் படுத்தப்பட்டுள்ளன. செம்பரம்பாக் கம் ஏரித் தண்ணீர் அடையாறில் கலக்கும் இடத்தில் (திருநீர்மலை பாலம் அருகே) 250 மீட்டர் நீளத்துக்கு 8 மீட்டர் உயரத்தில் பெரிய தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள் ளது. மேலும் அடையாற்றை தூர்வாரி அகலப்படுத்தி, இருபுற மும் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. ரூ.4 கோடியே 50 லட்சத்தில் இப்பணிகள் முடிக்கப்பட்டிருக் கின்றன.

சென்னைக் குடிநீர் வாரிய அதிகாரி கூறும்போது, “சென்னை யில் வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள் உள் ளிட்ட இடங்களில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்படும் 10 இடங்களைத் தேர்வு செய்துள் ளோம். அங்கு பெரிய குழாய்கள் பதித்து அவற்றின் மூலம் கழிவு நீரை சேகரித்து அந்தந்த பகுதி களில் அமைக்கப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவுநீரை சுத்திகரிப்பதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படு கின்றன” என்றார்.

வடகிழக்கு பருவமழைக் காலத்தில் வெள்ளம் வந்தாலும் முழுவதுமாக கூவம், அடையாறு, இதர வாய்க்கால்கள் வழியே தடை யின்றி ஓடி கடலில் கலக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்