புதுச்சேரியிலிருந்து முதல் முறையாக வெளிநாட்டுக்கு இணைப்பு விமான சேவை வரும் அக்டோபர் முதல் தொடங்கப்பட உள்ளது.
புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து தற்போது பெங்களூரு மற்றும் ஹைதாராபாத் ஆகிய இரு நகரங்களுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தினசரி விமான சேவையை அளித்து வருகிறது. மேலும் சென்னை மற்றும் சேலத்துக்கு தினசரி விமான சேவையைத் தொடங்குவதற்கான ஆயத்த வேலைகளில் ஏர் ஒடிஷா நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், அக்டோபர் 10-ம் தேதி புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து முதல் முறையாக தாய்லாந்து நாட்டின் பேங்காங் நகருக்கான முதல் வெளிநாட்டு இணைப்பு விமான சேவையைத் தொடங்க உள்ளது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம். இதற்கான முன்பதிவையும் அந்நிறுவனம் தற்போது தொடங்கியுள்ளது.
காலை 11.45 மணிக்கு புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானம் ஹைதராபாத் சென்றடையும். பின்னர் மற்றொரு விமானம் வழியாக இரவு 9.40 மணிக்கு பேங்காங் நகருக்கு சென்றடைகிறது. அதேபோல் இரவு 10.40 மணிக்கு பேங்காங் நகரிலிருந்து புறப்படும் விமானம் ஹைதராபாத் வழியாக மறுநாள் காலை 11.25 மணிக்கு புதுச்சேரி வந்தடைகிறது. இதற்கான கட்டணம் 14,429 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
41 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago