காளிமுத்து உள்ளிட்ட தலைவர்கள் போட்டியிட்ட இடம்: திருப்பரங்குன்றம் தொகுதியில் 2 ஆண்டில் 3-வது தேர்தல்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

திருப்பரங்குன்றம் தொகுதியில் அடுத்தடுத்து 2 எம்எல்ஏக்கள் இறந்ததால் 2 ஆண்டுகளில் மூன்றாவது தேர்தலை சந்திக்க உள்ளது.

திருப்பரங்குன்றம் சட்டப் பேரவை தொகுதியில் அதிமுக 8 முறையும், திமுக 4 முறையும், காங்கிரஸ் 2 முறையும், தேமுதிக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. இத்தொகுதியின் அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் நேற்று முன்தினம் இரவு மாரடைப் பால் காலமானார். இவர் 2004-ல் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2006-ல் திருப்பரங்குன்றம் சட்டப் பேரவை தொகுதியில் போட்டி யிட்டு வென்றார். 2011-ல் மதுரை வடக்கு தொகுதியில் வெற்றி பெற்றார்.

இத்தொகுதியில் 2016-ல் போட்டியிட ஏ.கே.போஸ் சீட் கேட்டிருந்தார். உடல் பருமன், இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு அப்போதைய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வாய்ப்பு வழங்கவில்லை. யாரும் எதிர்பாராத வகையில் எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான எஸ்.எம்.சீனிவேலை வேட்பாளராக அறிவித்தார். வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு எஸ்.எம்.சீனி வேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் அவர் வெற்றி பெற்றார். ஆனால், தான் வெற்றி பெற்றதுகூட தெரியாத நிலையில் கோமா நிலைக்குச் சென்ற அவர், அதில் இருந்து மீள முடியாமலேயே இறந்தார். அதனால், அதே ஆண் டில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட் டது. இடைத்தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா உடல்நலக்குறைவு ஏற்பட்டு அப்போலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். ஏ.கே.போஸ் சசிகலா குடும்பத் துக்கு நெருக்கமானவர் என்பதால் அவரே திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளரானார். உடல்நலக் குறைவால் நடக்கக்கூட முடியா மல் இருந்த அவரை வேட்பாளராக அறிவித்தது சரியில்லை என்று அப்போதே அதிமுகவில் அதிருப்தி ஏற்பட்டது.

இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் தான் ஏ.கே.போஸின் தேர்தல் விண்ணப்பத்தில் ஜெயலலிதா கைரேகை வைத்த விவகாரம் சர்ச்சையானது. தேர்தலில் வெற்றி பெற்றாலும் ஏ.கே.போஸால் கடந்த 2 ஆண்டுகளாக சரியாக செயல்பட முடியவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவரால் கட்சி நிகழ்ச்சிகள், அரசு விழாக்களில் கலந்து கொள்ள முடியவில்லை.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா அணியில் நீடித்தார். அவர் சிறைக்கு சென்றதும், முதல்வர் கே.பழனிசாமி அணிக்கு மாறினார். அவர் தினகரன் அணிக்கு எந்த நேரத்திலும் மாறுவார் கருதப்பட் டது. இந்நிலையில், ஏ.கே.போஸ் இறந்ததால் திருப்பரங்குன்றம் தொகுதி 2 ஆண்டுகளில் 3-வது தேர்தலை சந்திக்க உள்ளது. மேலும், இது அத்தொகுதிக்கு 2-வது இடைத்தேர்தல் ஆகும். முன்னாள் சட்டப்பேரவைத் தலை வர் கா. காளிமுத்து உட்பட பல் வேறு முக்கிய தலைவர்கள் போட்டி யிட்ட தொகுதியில் எம்எல்ஏ ஆவதை அரசியல் கட்சியினர் கவுரவமாகக் கருதினர். தற்போது இந்த தொகுதியில் 2 ஆண்டுகளில் 2 எம்எல்ஏக்கள் இறந்ததால் அதிமுகவினர் கலக்கம் அடைந்து உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்