காஞ்சிபுரத்தில் தனியாருக்கு பட்டுச் சேலைகள் நெய்து தரும் நெசவாளர்களுக்கு 20 ஆண்டுகளாக முறையான கூலி உயர்வு ஒப்பந்தம் போடப் படாமல் உள்ளது. இதனால் தனியார் நெசவாளர்கள் பலர் போதிய வருமானம் இல்லாமல் நெசவுத் தொழிலைவிட்டு வெளியேறும் சூழல் உள்ளது.
வட இந்தியாவில் புகழ் பெற்ற பனாரஸ் பட்டுபோல் தென் இந்தியாவில் புகழ் பெற்றது காஞ்சிபுரம் பட்டு. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு பட்டுச் சேலை களை எடுக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பலர் காஞ்சிபுரம் வருகின்ற னர். அந்த அளவுக்கு காஞ்சி புரத்தில் பட்டு நெசவாளர்கள் நெய்யும் பட்டுச் சேலைகள் நேர்த்தியானவை.
போதிய வருமானம் இல்லாமல் தற்போது அந்தப் பட்டு நெசவுத் தொழிலை விட்டுப் பலர் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். தனியாருக்குச் சேலைகளை நெய்து தரும் தொழிலில் ஈடுபட்ட 70 சதவீதம் பேர் அந்தத் தொழிலில் இருந்து இப்போது வெளியேறிவிட்டதாக நெச வாளர்கள் கூறுகின்றனர். இவர்கள் காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள தனியார் நிறுவனப் பணிகளுக்கும், கட்டிடத் தொழிலுக்கும் செல்கின்றனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் ராமலிங்கம் வீதியைச் சேர்ந்த நெசவாளர் முரளி கிருஷ் ணன், “கூட்டுறவுச் சங்கங் களில் நெய்யும் பட்டு நெச வாளர்களுக்கு அரசு விதிப் படி கூலி உயர்வு அளிக்கப்படு கிறது. தனியாருக்கு சேலை நெய்யும் நெசவாளர்களுக்கும் 1998-ம் ஆம் ஆண்டு போடப் பட்ட கூலி உயர்வு ஒப்பந்தத் தோடு சரி. பிறகு போடப்பட வில்லை. சில உரிமையாளர் கள் மட்டும் நியாயத்துக்கு உட்பட்டு கூலியை உயர்த்திக் கொடுக்கின்றனர். நாங்கள் 80 ஆயிரம் மதிப்புள்ள ஒரு சேலை நெய்தால் ரூ.4 ஆயிரம்தான் கூலியாகக் கிடைக்கும். கூட்டுறவில் நெய் பவர்களுக்கோ ரூ.6 ஆயிரம் கிடைக்கும்” என்றார்.
இதேபகுதியைச் சேர்ந்த சரஸ்வதி என்னும் நெசவாளர், “நெசவுத் தொழிலில் போதிய வருமானம் இல்லாமல் கட்டிட வேலைக்குச் செல்கிறேன். அவ்வப்போது நெசவும் செய் கிறேன். எங்கள் தலைமுறை யுடன் இந்தத் தொழில் அழிந்துவிடுமோ என்ற அச்சம் உள்ளது” என்றார்.
இது குறித்து தமிழ் மக்கள் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் கோ.ரா.ரவி, “இந்தத் தொழிலைவிட்டுப் பலர் வெளி யேறி வருகின்றனர். நெசவுத் தொழிலைப் பாதுகாக்க தொழி லாளர்கள், முதலாளிகள், அரசு என முத்தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும்” என்றார்.
இதுகுறித்து மாவட்ட வரு வாய் அலுவலர் நூர்முகமது விடம் கேட்டபோது, “கூட்டுறவு சங்கங்கள் வழங்கும் கூலியை வழங்குவதற்காகத் தனியார் நெசவாளர்கள், பட்டுச் சேலை உற்பத்தி உரிமையாளர்களு டன் பேச்சுவார்த்தை நடத்தி யுள்ளோம். பட்டுச்சேலை உரிமையாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் விரைவில் கூலி உயர்வை அமல்படுத்து வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago