பேருந்து நிலையத்தில் தேங்கி நிற்கும் சிறுநீரால் சுகாதார சீர்கேடு: `உங்கள் குரல்’ பகுதியில் பயணிகள் புகார்

காஞ்சிபுரம் நகரப்பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் கழிப் பறைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் தேங்கி நிற்பதால், துர் நாற்றம் வீசுவதாக `தி இந்து’ `உங்கள் குரல்’ மூலம் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் நகரத்தின் மையப் பகுதியில் 7.36 ஏக்கர் பரப்பளவில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து தினமும் 400-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. செங்கல்பட்டு, வேலூர், சென்னை போன்ற பல்வேறு இடங்களில் இருந்து தினமும் 800-க்கும் மேற் பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. ஏராளமான பயணிக ளின் வசதிக்காக பேருந்து நிலை யத்தின் உள்ளே கட்டணக் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள் ளன. இந்த கழிப்பறைகளில் உள்ள கழிவுநீர் தொட்டிகள் நிரம்பி அதிலிருந்து வெளியேறும் கழிவு கள் பேருந்து நிலையத்தில் தேங்கி நிற்கின்றன.

பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சியின் 111 கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு கள் பேருந்து நிலையத்தின் உள்ளே ஆங்காங்கே கொட்டப்படுவதால், பேருந்து நிலையம் முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. அதனால், பேருந்து நிலையத்துக்கு வரும் பள்ளி மாண வர்கள் மற்றும் பயணிகள் பெரி தும் அவதிப்படுகின்றனர் என தி இந்து-வின் `உங்கள் குரல்’ மூலம் பயணிகள் புகார் தெரிவித்துள் ளனர்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் நக ராட்சி ஆணையர் விமலாவிடம் கேட்டபோது,

“காஞ்சிபுரம் பேருந்து நிலையத் தில் பயணிகள் வசதிக்காக `நம்ம டாய்லெட்’ திட்டத்தின் மூலம் பெங்க ளூர் செல்லும் பேருந்துகள் நிற்கும் பகுதியில் ரூ.15 லட்சம் செலவில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள் ளன. மேலும், தற்போது உத்திர மேரூர் செல்லும் பேருந்துகள் நிற்கும் பகுதியிலும் ரூ.15 லட்சம் செலவில் கழிப்பறைகள் அமைக்கப் பட உள்ளன. இந்த கழிப்பறைகளை பயணிகள் இலவசமாக பயன் படுத்தலாம். பயணிகள் கட்டணம் என்று நினைத்து, இலவச கழிப்பறைகளைப் பயன் படுத்தாமல், பேருந்து நிலையத்தின் ஒதுக்குப்புறமாக உள்ள பகுதிகளில் சிறுநீர் கழிக்கின்றனர். அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் சிலரும் பேருந்து நிலையத்தின் உள்ளே திறந்த வெளியில் சிறுநீர் கழிக்கும் நிலை உள்ளது.

பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் இருந்து வெளி யேற்றப்படும் கழிவுகள் மற்றும் குப்பையை நகராட்சியின் துப்பு ரவுப் பணியாளர்கள் மூலம் தினமும் அகற்றி, பிளிசீங் பவுடர் தெளித்து வருகிறோம். இலவச கழிப்பறைகள் குறித்து பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள் அறிந்துகொள்ளும் வகையில் விளம்பர பலகைகள் அமைக்க நட வடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் அரசு போக்குவரத்து பணிமனை மேலாளர் பரிதி இளம்வழுதியிடம் கேட்டபோது, “அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் யாரும் பேருந்து நிலையத்தின் உள்ளே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதில்லை. எனினும், தற்போது புகார் கூறப்பட்டுள்ளதால் நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களை அழைத்து இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தப்படும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE