வரும் 23-ம் தேதி புதுச்சேரிக்கு கொண்டு வரப்படுகிறது வாஜ்பாய் அஸ்தி

By செ.ஞானபிரகாஷ்

 மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட்டு வரும் 25-ம் தேதி கடலில் கரைக்கப்படுகிறது.

மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவால் கடந்த16 ஆம் தேதி காலமானதையடுத்து அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இதனையடுத்து டெல்லியிலிருந்து ஹரித்துவாருக்கு ஹெலிகாப்டர் மூலம் வாஜ்பாயின் அஸ்தி கொண்டு செல்லப்பட்டு பின்னர் கங்கை நதிக்கரையில் குடும்ப உறுப்பினர்களால் அஸ்தி கரைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து நாடு முழுவதும் அவரின் அஸ்தி புனித நதிக்கரைகள் கடல்களில் கரைக்கப்படவுள்ள நிலையில் புதுச்சேரியிலும் கரைக்கப்படவுள்ளது.

அதனைக் கொண்டு வருவதற்காக டெல்லி செல்லும் முன் புதுச்சேரி விமான நிலையத்தில் பேட்டியளித்த பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன், “வரும் 23-ம் தேதியன்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி புதுச்சேரி கொண்டுவரப்படும். 24-ம் தேதி காரைக்கால் கொண்டு செல்வோம். வரும் 25-ல் முதல்வர், துணைநிலை ஆளுநர் மற்றும் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளும் புகழஞ்சலி நிகழ்ச்சிக்குப் பின் அவரது அஸ்தி புதுச்சேரி கடலில் கரைக்கப்படவுள்ளது” எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்