மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

By எஸ்.விஜயகுமார்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

கேரளா, கர்நாடக மாநிலங்களில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை கொட்டித் தீர்த்தது. இந்த கனமழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த ஒரு மாதமாகவே அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்துள்ளது. இதனால், கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை நிலவரப்படி, மேட்டூர் அணை நீர் மட்டம் 120.19 அடியாகவும், நீர் இருப்பு 93.77 டிஎம்சியாகவும் உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக குறைந்தது. நீர் திறப்பு விநாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.

நடப்பாண்டிலேயே மேட்டூர் அணை மூன்று முறை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்