அரசியலைத் தாண்டி பல துறைகளுக்கும் பங்களிப்பு செய்தவர்: பினராயி விஜயன் இரங்கல்

By செய்திப்பிரிவு

 

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 95. மாலை 6.10 மணிக்கு கருணாநிதியின் உயிர் பிரிந்ததாக காவேரி மருத்துவமனை அறிவித்துள்ளது.

இதையடுத்து அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ‘‘திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அரசியலில் கலைஞர் ஒரு முதுபெரும் தலைவர். அரசியலில் மட்டுமின்றி பல துறைகளிலும் தனது பங்களிப்பைச் செய்தவர். தமிழ் மொழிக்கும், இலக்கியத்திற்கும் சிறந்த பங்களிப்பை அவர் செய்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’’ எனக் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்