கம்யூனிஸ்ட்கள் களத்தில் இல்லாத 22 தொகுதிகளில் வேட்பாளர்களின் தரத்தைப் பொறுத்து ஆதரவளிக்க முடிவெடுக்கப் பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் தமிழகத்தில் தலா ஒன்பது தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடாத தொகுதிகளைச் சேர்ந்த அக்கட்சி தொண்டர்கள், அருகாமையில் கட்சி போட்டியிடும் தொகுதியில் தேர்தல் பணியாற்றத் தொடங்கியுள்ளனர். இந்த விஷயத்தில் மார்க்சிஸ்ட்கள் மாறுபட் டுள்ளனர்.
இது குறித்து ஈரோடு மாவட்ட மார்க்சிஸ்ட் செயலாளரும், மாநில குழு உறுப்பினருமான மாரிமுத்துவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் அடங்கியுள்ள பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி ஆகிய சட்டசபை தொகுதிகளில் உள்ள மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் சி.பி.ஐ. வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர். ஈரோடு, மொடக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள், இந்த தேர்தலில் கம்யூனிஸ்ட்களின் நிலைப்பாடு குறித்து வாக்காளர்களிடையே பரப்புரை செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கம்யூனிஸ்ட்கள் போட்டியிடாத தொகுதி யில் உங்களின் ஆதரவு யாருக்கு? என்று கேட்டபோது, “இது தொடர்பாக மாநிலக்குழுவில் விவாதிக்கப்பட்டுள்ளது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி கட்சிகளுக்கோ, அவர்களது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கோ ஆதரவளிப்பதில்லை என முடிவெடுத்து விட்டோம். இவர்கள் இல்லாமல் அந்தந்தத் தொகுதிகளில் உள்ள சிறந்த வேட்பாளர்கள் குறித்து இரு கட்சிகளும் கலந்து பேசி, ஒவ்வொரு தொகுதியிலும் எந்த வேட்பாளருக்கு ஆதரவு என்பதை மாவட்ட கமிட்டிக்கு தெரிவிக்கும். அதன் அடிப்படையில் அந்தத் தொகுதிகளில் இரு கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களும் வாக்களிப்பர்” என்றார்.
அப்படியானால் கம்யூனிஸ்ட்களின் வாக்கு கள் சுயேச்சைகளுக்கு போகும் என்று எடுத்துக் கொள்ளலாமா? எனக் கேட்டபோது, “சுயேச்சை வேட்பாளர்களிலும் சிறந்த வேட்பாளர்கள் இருக்கத்தானே செய்கின்றனர். அந்த வேட்பாளருக்கு வாக்களிக்க மாநிலக்குழு முடிவு செய்துள்ளது என்ற தகவலை மட்டும் சொல்லும். கட்சியினரும் அதன்படி வாக்களிப்பார்கள்”. என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago