மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20 ஆயிரத்து 742 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கேரளா, கர்நாடக மாநிலங்களில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை கொட்டித் தீர்த்தது. இந்த கனமழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த ஒரு மாதமாகவே அதிகரித்து காணப்பட்டது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் கர்நாடக மாநிலத்தில் கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிந்தது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் கூடுதல் நீர் திறக்கப்பட்டு வருகிறது. சனிக்கிழமை காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 20 ஆயிரத்து 742 கனஅடியாக அதிகாரித்தது. அணை நீர்மட்டம் 120 அடியாகவும், அணை கொள்ளளவு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 20 ஆயிரத்து 800 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
நடப்பாண்டிலேயே மேட்டூர் அணை மூன்று முறை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
37 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago