வீராணம் ஏரியில் தண்ணீர் நிரம்பியதைத் தொடர்ந்து சென்னைக்கு குடிநீர் தேவை கருதி 55 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர்த்தேக்கமாக விளங்கும் வீராணம் ஏரி தற்போது 46.7 கனஅடியை எட்டியுள்ள நிலையில் 5 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி சனிக்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் பெய்துவரும் கனமழையால் மேட்டூர் அணைக்கான நீர் வரத்து 1.43 லட்சம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மேட்டூரிலிருந்து டெல்டா பாசனப் பகுதிகளுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் காவிரி ஆற்றில் பாய்ந்தோடி, கல்லணை வழியாக அங்கிருந்து கீழணைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் வடவாறு வழியாக கடந்த ஆகஸ்டு 27 ஆம் தேதி வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதையடுத்து வீராணம் ஏரியின் நீர்பிடிப்பு அதிகரித்து தற்போது 46.7 கனஅடியை எட்டியுள்ளது. இதனிடையே வீராணத்திலிருந்து 920 கனஅடி நீர் பாசனத்திற்காகவும், வாலாஜா மற்றும் பெருமாள் ஏரிகளுக்குக்கு திறக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதத்துடன் சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது வீராணம் ஏரியில் நிரம்பியதைத் தொடர்ந்து சென்னைக்கு குடிநீர் தேவை கருதி 55 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 975 கனஅடி தண்ணீர் வீராணத்திலிருந்து திறக்கப்பட்டுள்ளது.சென்னைக்கு அனுப்பும் குடிநீரின் அளவு ஓரிரு நாளில் 77 கனஅடி அதிகரிக்கவும் வாய்ப்பிருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago