இலங்கை கடற்படையினரால் 27 தமிழக நாட்டுப்படகு மீனவர்கள் சிறைப்பிடிப்பு: விடுதலை செய்யாவிடில் கச்சத்தீவில் குடியேறும் போராட்டம் நடத்த முடிவு

By எஸ்.முஹம்மது ராஃபி

இலங்கை கடற்படை கைது செய்துள்ள தமிழக நாட்டுப்படகு மீனவர்கள் 27 பேரையும் உடனடியாக விடுதலை செய்யாவிடில் விரைவில் கச்சத்தீவில் குடியேறும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி நம்புதாளை பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், கிருஷ்ணன், பழனி ஆகியோருக்குச் சொந்தமான 3 நாட்டுப்படகுகளில் அருகிலுள்ள புதுக்கோட்டை மாவட்டம் சென்பகமகாதேவிப் பட்டினம் கடற்கரையிலிருந்து 22 மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். வெள்ளிக்கிழமை நள்ளிரவு இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வீசிய சூறாவளிக் காற்றால் மீனவர்களின் கட்டுப்பாட்டை இழந்த நாட்டுப்படகுகள் இலங்கைக் கடல் பகுதிக்குள் சென்றன.

அப்போது கச்சத்தீவு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 நாட்டுப்படகுகளையும், அது போல திசைமாறி வந்த நாகை மாவட்ட பைபர் படகு ஒன்றையும் சிறைப்பிடித்தனர். சிறைப்பிடிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 22 பேர் நாகை பைபர் படகு மீனவர்கள் 5 பேர் என மொத்தம் 27 பேரையும் கடற்படை முகாமுக்கு விசாரணைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் யாழ்ப்பாணம் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்நிலையில் 27 மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இல்லையேல் மீனவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விரைவில் கச்சத்தீவில் குடியேறும் போராட்டம் நடத்துவோம் அல்லது சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிட்டிருப்பதாகவும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜனிடம் கோரிக்கை மனு அளிக்க வந்திருந்த மீனவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங் கூட்டமைப்பின் சி.ஐ.டி.யூ.பிரிவின் ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் எம்.கருணாமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், ''இலங்கை கடற்படை எப்போது கைது செய்தாலும் விசைப்படகு மீனவர்களைத்தான் பெரும்பாலும் கைது செய்வது வழக்கம். ஏனெனில் விசைப்படகு மீனவர்களின் மீன்பிடிப்பு முறையால் தான் தங்களது வாழ்வாதாரம் பாதிப்பதாகக் கூறி அதனை முறைப்படுத்த வேண்டும் எனவும் இலங்கை மீனவர்கள் வலியுறுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் 4 நாட்டுப் படகுகளில் 27 நாட்டுப்படகு மீனவர்களை இலங்கை கைது செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

எனவே, தமிழக நாட்டுப்படகு மீனவர்கள் 27 பேரையும் உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். சிறைப்பிடித்து வைக்கப்பட்டுள்ள 4 நாட்டுப் படகுகளையும் விடுவிக்க வேண்டும். நாட்டுப்படகு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது மேலும் தொடராமல் தடுக்கப்பட வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விரைவில் தமிழக நாட்டுப்படகு மீனவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து நாம் நட்புக்காக விட்டுக் கொடுத்த கச்சத்தீவில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும் அல்லது சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பாக மீனவர்களை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம்'' என்றார்.

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 27 மீனவர்களும் ஒரு வார காலம் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்படுவார்கள் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்